நூல் பெயர் : கருவறைச் சுவர்கள்
(கவிதை )
ஆசிரியர் : ப.தனஞ்ஜெயன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 164
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடேட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 150
கரு என்பது பிறப்பிடத்தின் ஆதி. கருவறை என்பது இருப்பிடத்தின் ஆதி. பிறப்பிடமும் இருப்பிடமும் சேர்ந்தால் அது உயிரின் ஆதி. அழியும் இடங்கள் ஆயிரம் இருந்தாலும் உருவாகும் இடம் ஒன்றே ஒன்றுதான் என்பதே உயிரின் சிறப்பு. ஆதியில் தொடங்கப்பட்ட உயிர்ப்பயணம் அந்தம் வரை நீளும் வாழ்க்கைப் பயணத்துடன் கலந்திருப்பதே இப்பேரண்டத்தின் நீட்சி. இப்படியாக கருவறையில் தொடங்கி கல்லரையில் முடியும் மனித வாழ்வின் நீட்சிகளை எல்லாம் கவிதைகளாக காட்சிப்படுத்துவதே 'கருவறைச் சுவர்கள்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் எல்லோருக்கும் ஏதோவொரு வகையில் நாம் கடந்துவந்த சில நிகழ்வுகளை சொல்லிப் போவதும் அது வாசிப்பவர் எண்ண ஓட்டத்தில் கலந்து கிறங்கடிப்பதும் இத்தொகுப்பின் பலம்.
புதுச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ப.தனஞ்ஜெயன் அவர்களுக்கு இது நான்காம் தொகுப்பு. இவர் இதற்கு முன்பு படைப்பு பதிப்பகம் மூலம் இரண்டு நூல்களை வெளியிட்டு இருக்கிறார். அது பலராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவரது பல படைப்புகள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகி வருகின்றன. மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தை இரண்டு முறை பெற்றவர் மேலும் படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.