நூல் பெயர் : உதிர் நிழல்
(கவிதை)
ஆசிரியர் : கி.கவியரசன்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 90
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ஆரூர் த.இலக்கியன்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 90
எளிதாகக் கிடைக்கும் எல்லாவற்றின் மூலமும் எளிதாகவே கிடைக்கும் என்பது உண்மையல்ல. வெயிலும், நிலவொளியும் மிக எளிதாகக் கிடைத்தாலும் அதன் மூலமான சூரியனும் நிலவும் யாருக்கும் கிடைக்காது. அதுபோலவே, எளிமையாக இருக்கும் கவிதைகள் யாவும் எளிமையான பொருளும், ஆழமுமே கொண்டிருக்கும் என்பதும் உண்மையல்ல. நம் கற்பனைக்கெட்டாத காட்சியின் பிரமாண்டமாகவும் அது இருக்கலாம். அப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் கவிதைக்குள் கொண்டுவந்து, ஒரு கிளையிலிருந்து மிக இலகுவாக சிறகசைத்துப் பறக்கும் பறவையைப்போல பத்தி பிரித்தும், அது வானம் பார்த்துக் கூடுதிரும்பும் வாழ்வியலைப் போல வரிகளை அமைத்தும் உருவாக்கப்பட்டிருப்பதே ’உதிர் நிழல்’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஏதோவொரு நிகழ்வினை நமக்குள் நெருக்கமாக்கிவிட்டுப்போவது இத்தொகுப்பின் பலம்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் எனும் ஊரை வசிப்பிடமாகக் கொண்டவரும், பள்ளியின் தாளாளருமான படைப்பாளி கி.கவியரசன் அவர்களுக்கு இது, இரண்டாம் தொகுப்பு. இவரது முதல் தொகுப்பின் பல கவிதைகள், பலராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.