logo

தாழப்பறக்கும் பருந்து (ஹைக்கூ)


நூல் பெயர்                : தாழப்பறக்கும் பருந்து  (ஹைக்கூ)

 

ஆசிரியர்                    : அன்பழகன்ஜி

 

பதிப்பு                       :  முதற் பதிப்பு - 2024

 

பக்கங்கள்                  :  98

 

வெளியீட்டகம்       :  இலக்கிய படைப்பு குழுமம்

 

வெளியீடு                  :  படைப்பு பதிப்பகம்

 

விலை                         :  ரூ 140

ரெங்கா, டாங்கா போன்ற ஜப்பானிய மரபுக்கவிதை வடிவங்களின் இறுக்கமான இலக்கணக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலைபெற விரும்பியபோதுதான் ஹைக்கூ பிறந்தது. தமிழ் இலக்கியம்  காலந்தோறும்  பல்வேறு வகையான பாடுபொருளுக்கும் புதிய இலக்கிய வடிவங்களுக்கும்  இடங்கொடுத்து  அதனை வளப்படுத்தியுள்ளது. அவ்வரிசையில்  குறிப்பிடத்தக்கது ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ. கீழ்த்திசைப் பௌத்தச் சிந்தனையில் முகிழ்த்துச், சீனத்துப் பண்பாட்டில் திளைத்து, ஜப்பானிய அழகுப்பார்வையில் மலர்ந்து கவிதை மணம் வீசும் ஹைக்கூ இன்று தமிழ் இலக்கியத்திலும் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஹைக்கூவின் சிறப்பே ஒரு கவிதையைக் காட்சிப்படுத்தி, ஆனால் அதைப்பற்றிச் சொல்லாமல் அதன் விளைவான உணர்ச்சிகளையும் சொல்லாமல் படிப்பவரின் கற்பனைக்கே அவைகளை விட்டுவிடுவதுதான். இப்படிபட்ட ஹைக்கூ கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘தாழப்பறக்கும் பருந்து’ நூல்.

 

நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டம் கடிநெல்வயல் என்ற ஊரை பிறப்பிடமாகவும்,  திருச்சியை வாழ்விடமாகவும், தமிழ்நாடு அரசு சிறைத் துறையில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான படைப்பாளி  அன்பழகன்ஜி அவர்களுக்கு இது இரண்டாவது நூல். இன்றைய இணைய ஊடங்களில் தனது இலக்கிய பங்களிப்பால் நன்கு அறியப்பட்டவர்.  மேலும் கவிதைகளிலும் சிறுகதைகளிலும் எண்ணற்ற பல பரிசுகளையும், படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரத்தையும் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.