நூல் பெயர் : பொய்மசியின் மிச்சம்
(கவிதை)
ஆசிரியர் : மதுசூதன்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 94
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : கமல் காளிதாஸ்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
பொய் என்பது உண்மைக்கு எதிரானது அல்ல. மாறாக, ஆதாரமானது. பொய் இல்லையெனில் உண்மைக்கான தேவை இங்கே இருந்திருக்காது. பொய்தான் இவ்வுலகத்தின் முதல் உண்மை. உயிர்களில் முதல் பொய் மனிதன். முதன் முதலில் பொய் சொன்னவனும் மனிதனே. உண்மையில் தொடங்கி உண்மையில் முடியும் எல்லாவற்றின் இடையிலும் பொய்களே நிரம்பி இருக்கும், பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே நிரம்பியிருக்கும் வாழ்வைப் போல. அப்படிப்பட்ட பொய்மையின் மிச்சங்களாக இருக்கும் உண்மையான வாழ்வியலையெல்லாம் கவிதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘பொய்மசியின் மிச்சம்’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் எல்லோருக்கும் புரியும்வகையில் மிக எளிய நடையில் இருப்பதும் அது எதார்த்தங்களை வாசிப்பவர் மனதில் விதைத்துவிட்டுப் போவதும் இத்தொகுப்பின் பலம்.
சேலத்தைப் பிறப்பிடமாகவும், பெங்களூரை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி, மதுசூதன் அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், கவிச்சுடர் எனும் உயரிய விருதையும் பெற்றவர் மேலும் படைப்பு பரிசுப்போட்டியில் கவிஞர் வண்ணதாசன் அவர்களால் தேர்வு செய்யப் பட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது