நூல் பெயர் : கிறிஸ்டினா அருள்மொழி கவிதைகள் (கவிதைகள்)
ஆசிரியர் : கிறிஸ்டினா அருள்மொழி
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
102
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 150
கவிதை என்பது “சக்திவாய்ந்த உணர்வுகளின் தன்னிச்சையான வழிதல்” என்கிறார் வில்லியம்
வேர்ட்ஸ்வொர்த். “நான் ஒரு புத்தகத்தைப் படித்தால், அது என் உடலை குளிர்ச்சியாக மாற்றினால்,
எந்த நெருப்பும் என்னை சூடேற்ற முடியாது, அது கவிதை என்று எனக்குத் தெரியும்.” என்கிறார்
எமிலி டிக்கின்சன். “ என்னை சிரிக்க வைக்கிற அல்லது அழ வைக்கிற அல்லது கொட்டாவி விட
வைக்கிற அல்லது என் கால் விரல் நகங்களை மிளிரச் செய்கிற அல்லது இதைச் செய்ய வேண்டும்,
அதைச் செய்ய வேண்டும் என்றில்லாமல் எதுவுமே செய்ய விரும்பாமல் வைத்திருக்கிற ஒன்றே
கவிதை.” என்கிறார் டிலான் தாமஸ். “செவி நுகர் கவிகள்” என்கிறார் கம்பர் அதாவது கவிதையின்
உயர்வைக் காதில் போட்டுப் பார்க்க வேண்டும். கவிஞன் தனது உள்ளத்து எழுந்த ஒரு அனுபவத்தைச்
சப்த நயங்களினாலோ அல்லது எழுத்துக்களினாலோ உணர்த்த முடியும் என்பதே கம்பரின் கூற்று.
அப்படி படைப்பாளி கிறிஸ்டினா அருள்மொழி அவர்களின் உள்ளத்தில் உதித்து எழுத்தாகிய கவிதைகளை
எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கி இருப்பதே ‘கிறிஸ்டினா அருள்மொழி கவிதைகள்’ எனும் இந்நூல்.
கோவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி கிறிஸ்டினா அருள்மொழி அவர்களுக்கு இது இரண்டாவது நூல். இன்று அவர் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்று விட்டிருந்தாலும் இலக்கிய உலகிலும் இணைய ஊடகங்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். நம் படைப்புக் குழுமத்தின் மாதாந்திர பரிசு உட்பட, படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் படைப்புக் குழுமமும் படைப்பாளி கவிஜி அவர்களும் மற்றும் படைப்பாளி கிறிஸ்டினா அவர்களுடைய நலம் விரும்பும் படைப்பாளிகளும் இணைந்து அவரது நினைவைப் போற்றும் வகையில் இந்நூலை கொண்டு வந்திருக்கிறோம்.