நூல் : தங்க உடலை தேடிச் சென்ற ஒரு பாம்பின் கதை
நூல் வகைமை : சிறுகதைகள்
ஆசிரியர் : முத்து மகரந்தன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 160
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 290
முத்து மகரந்தனின்
சிறுகதைகள் மண்ணில் புதையுண்ட வேர்களிலிருந்து எழுதப்படும் போதே அவர் காட்சிப்படுத்தும்
நிலமும் மனிதர்களும் நமது கனவுகளில் நடமாடுபவர்கள் போல நம்மை ஸ்பரிசிக்கிறார்கள். உணவை
மட்டுமே சாராத நிலத்தின் கதைகளில் வரும் புனைவுகளில் நாமே நடமாடுவது நினைவா கனவாவெனவும்
ஒரு தோற்ற மயக்கமும் ஏற்படுகிறது.
நிஜத்திற்கும்
நிழலுக்கும் நடுவே புனைவின் சீட்டுக்கட்டை கலைக்கும் இக்கதைகள் நாம் அறியாத யூகங்களைக்
கடந்து நம்மை வந்தடையும் போது வாசிப்பின் பூரணத்துவம் சம்பூர்ணமாய் நிகழ்கிறது.