நூல் பெயர் : வேடு (கவிதைகள்)
ஆசிரியர் :
மா.காளிதாஸ்
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
124
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 170
ஒவ்வொரு
தலைமுறைக்கும் ‘மாற்றம் தரும் தருணம்’ என்பது உண்டு. அது பெரும்பாலும் இலக்கியத்திலிருந்தே
பெறப்படுகிறது. அந்தந்தத் தலைமுறையினரின் பொதுவான அச்சங்கள், அம்சங்கள், கல்விமுறை,
வாழ்க்கைமுறை, எதிர்காலத்தைப் பற்றிய புரிந்துணர்வு என எல்லாவற்றையும் இதுதான் தீர்மானிக்கிறது. இன்றைய இணைய வசதிகளால் தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு,
கலாச்சாரம், அரசியல், இலக்கியம் உட்பட உள்ளூர் நிகழ்வுகள்கூட உலக நிகழ்வுகளாக மாறுகின்றன.
ஒரு தலைமுறை வளர்ந்த காலத்தில் இருந்த வெவ்வேறு நிகழ்வுகள், மாற்றங்களின் அனுபவங்கள்
அவர்கள் வாழ்க்கையை எப்படி நகர்த்துகிறது, அவர்களின் கோணத்தை எப்படி மாற்றுகிறது, அது
சமூக மாற்றமாக எப்படி உருவெடுக்கிறது என்று பார்க்க இலக்கியமே வழி வகுக்கிறது. அப்படி
சமூகம் சார்ந்தும் வாழ்வியல் சார்ந்தும் எழுதப்பட்ட கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி
உருவாக்கப் பட்டிருப்பதே ‘வேடு’ எனும் நூல். நவீனமாக இருப்பதும் அதை ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்திச்
சொல்லி இருப்பதும், காட்சிகளை உருவாக்கும் வாழ்வியலைக் கவிதையாக எழுதிப் புரிய வைப்பதும் இந்நூலின் பலம்.
தென்காசி
மாவட்டம் சிவகிரியை அடுத்த ராயகிரியைப் பிறப்பிடமாகவும், மதுரையை வசிப்பிடமாகவும் கொண்ட
வணிகவியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியரான படைப்பாளி மா.காளிதாஸ் அவர்களுக்கு இது பதின்மூன்றாவது நூல். ஏற்கனவே இவரது மூன்று நூல்கள் படைப்பு பதிப்பகம்
மூலமே வெளிவந்து பலரது கவனம் பெற்றது. இணையத்தில் படைப்பு உட்பட பல தளங்களிலும் இவர்
கவிதைகள் தேர்வு செய்யப்பட்டுப் பதிவாகிக் கொண்டிருக்கிறது. சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும்
இன்றும் எழுதி வருகிறார். செல்வன் கார்க்கி
நினைவுப் பரிசு (த.மு.எ.க.ச), சௌமா இலக்கிய விருது, புன்னகை இலக்கிய விருது
உட்பட பல விருதுகள் பெற்றிருப்பதுடன் படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதும்
பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.