logo

கவிதை அனுபவம்


நூல் பெயர்    :  கவிதை அனுபவம்
                      (கட்டுரை)

ஆசிரியர்    :  இந்திரன்© . வ.ஐ.ச. ஜெயபாலன் 

பதிப்பு            :  இரண்டாம் பதிப்பு 2020

பக்கங்கள்    :  198

வடிவமைப்பு    :  ஸி.பிரகாஷ் 

அட்டைப்படம்    :  ரகு

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
  
வெளியீடு            :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ150
வழிகாட்டி மரங்களாக இருந்தாலும் அந்த மரங்களுக்கென ஒரு வாழ்வு இருக்கத்தான் செய்கிறது. இதே வேலையை மனிதர்கள் செய்யும்போது அது மகத்துவமாகிறது. மரங்களும் மனிதர்களும் வழிகாட்டுதல் என்ற ஒற்றை வேலையைச் செய்தாலும் அதன் மூலம் இலக்கை அடைய முடிந்தாலும், அந்த வழிகாட்டுதலிருந்து பெறப்படும் அனுபவத்தில் மாபெரும் வித்தியாசத்தை விதைக்கிறார்கள் மனிதர்கள்.காரணம், மரங்களுக்கோ வழிகாட்டுதலே வாழ்வாகிறது. மனிதர்களுக்கோ வாழ்வே வழிகாட்டுதலாகிறது. வாழ்வு வழிகாட்டுதலாகும்போதுதான் அதிலிருந்து அனுபவம் பெறப்படுகிறது. அப்படிப்பட்ட அனுபவங்களை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘கவிதை அனுபவம்’ தொகுப்பு... பொதுவாக, இலக்கியம் எழுதப்படலாம், எழுதப்பட்டதை பேசப்படலாம். ஆனால் இங்கு பேசியது எழுதப்பட்டது, எழுதியது இலக்கியமானது. இந்த மாற்றுச் சிந்தனை அனுபவமே இந்நூலுக்கான மிகப்பெரும் பலம்...

இந்தியாவில் பிறந்த கவிஞர் இந்திரன் அவர்களும், ஈழத்தில் பிறந்த கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களும், ஓர் நாள் கவிதை குறித்து உரையாடிக் கொண்டிருந்தபோது, அதை அப்படியே பதிவு செய்து நூலாக்கியுள்ளார் சுந்தரபுத்தன் அவர்கள். இந்நூலின் ஆசிரியர்களான இருவரும் இன்றைய இலக்கிய உலகில் தங்கள் படைப்புகள் மூலம் நன்கு அறியப்பட்டவர்கள் மேலும் அவர்களின் கலை மற்றும் எழுத்துப் பயணத்தில் பல வெற்றிகளையும் பல உயரிய விருதுகளையும் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.