நூல் : கருங்குருவி கவிதைகள்
நூல் வகைமை :
கவிதைகள்
ஆசிரியர் :
குமார் அம்பாயிரம்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 140
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 230
மரபான நவீன தமிழ் கவிதைகளில் எந்த பாவனைகளையும் வலிந்து
மேற்கொள்ளாமல் நிலத்தையும் வாழ்வையும் விட்டேத்தியான சம்பூரண அசட்டுத்தனத்துடன் எதிர்கொள்ளும்
அம்பாயிரத்தின் கவிதைகள் சமகால கூக்குரலிடும் அரசியல் கவிதைகளுக்கு மாற்றான எதிர் அரசியல்
பண்பை சுயாதீனமாக அடைந்துள்ளதுடன் பகடியின் பழங்கால வடிவத்தையும் சட்டென கடந்துள்ளதுடன்
பகடியின் புதிய மோசமான நற்குணங்களையும் அடைந்துள்ளது.
தமிழில் இதுகாறும் எழுதப்பட்ட கவிதைகளின் வடிவ ஒழுங்குகளை
முற்றாக நிராகரித்த அம்பாயிரம் கவிதைகள் கோட்பாடுகளிலும் கலை நுணுக்கங்களிலும் தன்
சாரத்தை எடுத்துக் கொள்ளாமல் பழங்குடி மனதின் தீரா வேட்டை விளையாட்டு மற்றும் கொண்டாட்ட
மனதுடன் வெளிப்படும் போதே சாமானியனின் வலியுடன் வெளிப்பட்டுள்ளது..