நூல் பெயர் :
அந்தாதி (சிறுகதை)
ஆசிரியர் :
ஆண்டன் பெனி
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
92
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 120
மனித
இருப்பு மற்றும் விஞ்ஞான பகுத்தறிவின் எல்லைக்கு அப்பால் உள்ள அனைத்தும் தம் எழுத்துகள்
மூலம் ஈர்க்கப்பட்டதாக உணர்பவன் எழுத்தாளன். உண்மையாக விளக்க முடியாத ஒன்றோ அல்லது
உண்மையை விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றோ நம் வாழ்வில் அனுபவமாக தேங்கியிருப்பின் அதை
அறிவியல் அனுமானங்களின்படி உடல் ரீதியாக சாத்தியமானதாகக் கருதப்படும் வரம்புகளில் வாழ்வியலை
எழுத்தாக்குவதே இலக்கியம். கவனம் செலுத்தும் பார்வைக்கு வெளியே ஒன்று அல்லது அதற்கு
மேற்பட்ட விஷயங்களில் மீறும் எந்தவொரு நிகழ்வும் மாயையை உருவாக்கும் ஆனால் இலக்கியம்
மானுடத்தை உருவாக்கும். அப்படிப்பட்ட மனித வாழ்வில் நிதம் நிகழும் நிகழ்வுகளை எல்லாம்
கண்முன் கொண்டு வந்து காட்சிகளாக்கும் கதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே
“அந்தாதி” நூல். இதில் உள்ள கதையும் காட்சியமைப்பும் வாசிப்பவரின் மனதுக்குள் ஊடுருவி
இந்த மாய உலகத்தின் மனித வாழ்வை புரிய வைக்கும் என்பதே இந்நூலின் பலம்.
கோவில்பட்டியைப்
பிறப்பிடமாகவும், திருச்சியை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி ஆண்டன் பெனி அவர்களுக்கு
இது ஒன்பதாம் நூல். இவர் இன்றைய இலக்கிய உலகிலும் சமூக வலைத்தளங்களிலும் தன் படைப்புகள்
மூலம் நன்கு அறியப்பட்டவர். தனது படைப்புகளுக்காக சௌமா இலக்கிய விருது உட்பட எண்ணற்ற
விருதுகளைப் பெற்றுள்ளார் மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த
படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், கவிச்சுடர் எனும் உயரிய விருதையும் பெற்றவர்
இவர் என்பது குறிப்பிடத்தக்கது.