சமகால எழுத்துலகில் எக்காலத்திற்கும் பொருத்தமான எழுத்துக்களைக் கண்டறிந்து புத்தகமாக்கித் தரமான படைப்புகளைத் தன்வசம் கொண்டுள்ள படைப்புக் குழுமம் தனது பெருமைக்குரிய படைப்பாக வெளியிடும் ‘இருளும் ஒளியும்’ நூல் பதிப்பக நூல்களின் வரிசையில் மிக முக்கியமானதொரு நூல் என்றால் அது மிகையல்ல. வாசிப்பின் மேல் காதலும் வேட்கையும் கொண்ட ஒவ்வொரு சாமானியனும் வாசித்துத் திளைக்க வேண்டிய புத்தகம் ‘இருளும் ஒளியும்’.
நிலவறை இருட்டுக்குள்ளிருந்து பொக்கிஷப் பெட்டகமொன்றின் ஒளிக் கசிவில் நின்றுகொண்டிருப்பவனைப் போலத்தான் இப்புத்தகத்தை அணுக வேண்டியதிருக்கும். அப்பழுக்கற்ற அவ்வொளியானது படரும் பொழுது எதிரிருப்பவரின் மீது தெய்வீகம் படர்கிறது. இருளைக் குழைத்துச் செய்யப்படும் நிகழ்வுகளில்தான் எத்தனை அர்த்தம் பொதிந்துள்ளது என்பதை இப்புத்தகத்தின் இருள்வழி எங்கும் காண முடிகிறது. ஒரு மந்தகாசப் பொழுதில் தானாகக் கலங்கித் தெளியும் ஒரு பெரு நீர்ப் பரப்பைப் போல வாசித்து முடிப்பவரின் மனநிலை மாறிவிடும் என்பது திண்ணம்.
படைப்பாளி "பிருந்தா சாரதி" அவர்கள் தன் இருள் தூரிகை மூலம் வெளிச்சத்தை வரைந்து இப்பிரபஞ்சத்தைத் தொடுகிறார். அதில் ஏற்படும் இறைநிலை உணர்வலைகளை எல்லாம் ஒன்று திரட்டி இப்பிரபஞ்ச மானுடத்திற்கே திருப்பித் தருகிறார்.
சென்னையை வசிப்பிடமாகவும் கும்பகோணத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட திரைப்பட இயக்குனரான இவருக்கு இது ஆறாவது தொகுப்பு. இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் முத்திரைக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் நிறைய விருதுகளைப் பெற்றிருந்தாலும் தனது "எண்ணும் எழுத்தும்" நூலுக்குப் படைப்புக் குழுமத்தால் வருடந்தோறும் வழங்கப்படும் இலக்கிய விருதும் 2018 இல் சிறந்த கவிதை நூலுக்காகப் பெற்றவர்.
நூல் பெயர்
இருளும் ஒளியும்
ஆசிரியர்:
பிருந்தா சாரதி
பதிப்பு:
முதற் பதிப்பு 2019
பக்கங்கள் :
120
அட்டைப்படம்:
ரவிபேலட்
வெளியீடு:
படைப்பு பதிப்பகம்
விலை:
100