நூல் பெயர் : கிரகயுத்தம் (கவிதைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
இரண்டாம் பதிப்பு - 2024
பக்கங்கள் :
122
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 170
சில நேரங்களில் யுத்தம் மற்றும் போராட்டமே வெற்றியை தரும் வழியாக இருக்கிறது.
இந்த யுத்தம் என்பது அந்த குறிப்பிட்ட காலத்தில் நடைபெற வேண்டும் என்பது காலத்தின்
கட்டாயமாக உள்ளது. புராணத்தில் கடவுளின் அவதாரங்கள் யாவும் யுத்தத்திற்காகவே நடந்துள்ளது.
மக்களால் செய்ய முடியாத யுத்தங்களை கடவுளின் மூலமாக செய்யப்பட்டு அதன் வெற்றியை அவதாரங்களுக்கு
உள்ளதாக இல்லாமல் அந்த மக்களுக்கு உரியதாகவே அமைக்கப்பட்டது. சில நேரங்களில் உயிர்களை
காக்க யுத்தமும் தேவை என்பதை இந்த அவதாரங்கள் உணர்த்தியது. உலகில் யுத்தம் காணாத மண்ணும்
இல்லை, மனிதனில் யுத்தம் காணாத மனமும் இல்லை.
மண்ணில் நடக்கும் யுத்தம் மற்றவர்களை வருத்தி வெற்றிகாண்பது அது பொன்னும் பொருளும்
தரலாம் மாறாக மனதில் நடக்கும் யுத்தம் தன்னையே வருத்தி வெற்றிகாண்பது அது விலைமதிப்பற்ற
கலையாகவோ கண்டுபிடிப்புகளாகவோ கவிதையாகவோ இருக்கலாம். அப்படிபட்ட மனக்கிரக யுத்த கவிதைகளை
எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கியிருப்பதே ‘கிரகயுத்தம்’ எனும் நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி
விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஏற்கனவே பதிப்பித்த இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம்
என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம்
ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின்
‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப்
பெற்றுள்ளார்.