நூல் பெயர் : பாஷோவின் பழைய குளம் (கட்டுரைகள்)
ஆசிரியர் : முகமது பாட்சா
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
152
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 210
கட்டுரைகள்
என்பது காலத்தின் சேமிப்பாகும். அதன் பயன் அறிவுசார்ந்து இயங்கும் போது அவை காலத்தின்
அழகை தம் கைகளில் ஏந்திக்கொள்ளும். அப்படி ஹைக்கூ கவிதைகளுக்கான மூல ஆதாரத்தைத் தேடிப்
பயணப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘பாஷோவின் பழைய குளம்’ என்ற கட்டுரை நூல். இந்த நூலில் கூடுதல்
சிறப்பாகக் கவிதைகளின் இயலைப்பேசும், ‘கவிதையியல்’ பகுதியும்,
மறக்கக்கூடாத இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய ‘மறக்கப்பட்ட ஆளுமைகள்’ என்ற பகுதியும் இணைந்திருக்கிறது. இந்தக் கட்டுரைகள் நமது படைப்பு
குழுமத்தின் தகவு கலை இலக்கிய இதழில் ‘அகழ்வும் நிகழ்வும்’ என்ற தொடராக வெளிவந்து பலரது கவனம் பெற்றது.
காரைக்காலை
பிறப்பிடமாகவும், சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி முகமது பாட்சா அவர்களுக்கு
இது மூன்றாம் தொகுப்பு. தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் படைப்பு பதிப்பகம் மூலம்
வெளியிடப்பட்ட இவரது கவிதைத்தொகுப்புகளான “ஆரிகாமி வனம்” மற்றும் “சைகைக்கூத்தன்” இரண்டும் பலரது பாராட்டுக்களுடன்
இன்றுவரை கவனம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இன்றைய இலக்கிய உலகிலும் சமூக வலைத்தளத்திலும்,
பிரபல பத்திரிக்கைகளிலும் தன் படைப்புகள் மூலம் நன்கு அறியப்பட்டவர். நவீனத்தை
எழுத்துகளில் புகுத்தி சமூகத்தை படைப்புகளில் கையாளும் படைப்பாளிகளில் கவனிக்கப்படும்
படைப்பாளி இவர். படைப்பு குழுமத்தின் பரிசுப்போட்டிகளில் கவிஞர் யூமா வாசுகி, கவிஞர்
மேத்தா மற்றும் எழுத்தாளர் பவா செல்லதுரை, நாஞ்சில் நாடன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர்.
மேலும் மாதாந்திர பரிசும் மற்றும் கவிச்சுடர் எனும் படைப்பின் உயரிய விருதுகளையும்
பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.