நூல் பெயர் :
உள்வாங்கும் உலகம் (கவிதைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
இரண்டாம் பதிப்பு - 2024
பக்கங்கள் :
112
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 160
எல்லாவற்றையும் எல்லா நேரமும் யாராலும் முழுமையாகத் தர்க்கப்படுத்த முடியாது.
காரணம், மன எழுச்சிகள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை.
அவையே இலக்கியம் போன்ற கலைகளை உருவாக்குகின்றன. தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட இந்த உன்னதமாக்கல்
நிலையில் உருவாகும் படைப்புகள் உலக இலக்கியங்களுடன் ஒப்பீடு செய்யும் படைப்புகளாக மாறிவிடுகின்றன.
உலகைப் புரிந்துகொள்ள உதவக்கூடிய கருத்துக்களைக் கொண்ட இத்தகைய கவிதைகள், உலகை நாம்
எப்படி பார்க்கிறோம், உலகம் நம்மை எப்படி பார்க்கிறது, நம் பார்வை எதனடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,
நம் சிந்தனை எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது அல்லது கட்டமைக்கப்பட்டுள்ளது என்று
கூர்ந்து ஆராயவும் இடமளிக்கிறது. இதுவரையில் கற்பிக்கப்பட்டு வந்த மதிப்பீடுகளைத் தகர்த்து,
புனிதம், உயர்வானது என்றெல்லாம் சொல்லப்பட்டதை உடைத்து, பகுத்தறிவுக்கு உட்படுகின்ற
பண்பாடு, கலாச்சார விழுமியங்களை, உலகளாவிய நோக்கில் ஒட்டு மொத்த மனித இருத்தலையும்
ஒற்றை உணர்வோடு பற்றிக் கொள்கிற கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே
“உள் வாங்கும் உலகம்” எனும் நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஏற்கனவே பதிப்பித்த இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.