நூல் பெயர் : ஹைட்ரோ கார்பன்
(கட்டுரைகள்)
ஆசிரியர் : பெரியார் சரவணன்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
100
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 140
நாம் எரிபொருளாகப் பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களில் ஹைட்ரஜனும், கார்பனும்
கலந்துள்ளது. இதேபோன்று ஹைட்ரஜனும், கார்பனும் கலந்த பல்வேறு வகையான எரிபொருள்கள் பூமிக்கு
அடியில் வாயுவாக தேங்கி உள்ளன. அவை மீத்தேன், புரோபைன், பியூடேன், ஈத்தேன், பென்டேன்
என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் எரிபொருள் ஆகும். ஹைட்ரஜன் அணுக்களும், கார்பன்
அணுக்களும் எந்த வகையில் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன என்பதை வைத்தே இவற்றிற்கு
பெயர் சூட்டப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 4 ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு கார்பன் அணுவும்
சேர்ந்திருந்தால் அது மீத்தேன். 2 கார்பன் அணுவும், 6 ஹைட்ரஜன் அணுவும் கலந்திருந்தால்
அது ஈத்தேன். இவ்வாறு நிலத்திற்கு அடியில் அணுக்கள் சேர்மானத்தின் அடிப்படையில் எரிபொருள்களாக
கலந்திருக்கும் இவற்றை ஒட்டுமொத்தமாக ஹைட்ரோ கார்பன் என்று அழைக்கிறார்கள். ‘ஹைட்ரோகார்பன்’
என்கிற வார்த்தை, நேரடி அறிவியல் அகராதிப் பொருளைத் தாண்டி நிலக்கரிப் படுகை, மீத்தேன்,
ஷேல் பாறையில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைக் குறிக்கும்
சொல்லாக இன்று மாறிவிட்டது. இந்த இரண்டு வகையான கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்திசெய்யப்பட்டால்,
அந்தப் பகுதி பாலைவனமாகிவிடும் என்ற அச்சமும் நிலவுகிறது. அதைப்பற்றிய புரிதலுக்கும்,
படித்து தெளிவதற்கும் தேவையான தகவல்களை ஆவணப்படுத்தியிருப்பதே ‘ஹைட்ரோ - கார்பன் திட்டம்
- நான் ஏன் ஆதரிக்கிறேன்’ நூல்.
திருச்சி மாவட்டம், திருவரங்கத்தைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும்
கொண்ட படைப்பாளி “பெரியார் சரவணன்” அவர்களுக்கு இது பதினெட்டாவது நூல். பெரியார் கொள்கைகளால்
ஈர்க்கப்பட்டு, தொடர்ச்சியான வாசிப்பு மற்றும் செயல்பாடுகள் மூலம் பெரியாரின் கருத்தியல்களை
இடையறாது பரப்புரை செய்து வருகிறார். பெரியாரின் சித்தாந்தங்களை ஏந்திக் கொண்டு தன்
பெயருக்கு முன்னால் பெரியார் என சேர்த்துக்கொண்டது மட்டுமில்லாமல் சாதி மறுப்பு திருமணத்தையும்
செய்து கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.