logo

புரவிக் காதலன்


நூல் பெயர்    :  புரவிக் காதலன்
                      (நாவல்)

ஆசிரியர்    :  14 அறிமுக எழுத்தாளர்கள் 

பதிப்பு            :  முதற்பதிப்பு 2020

பக்கங்கள்    :  276

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்    :  சிதம்பர அருண் 

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
  
வெளியீடு            :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ 200
கதை கேட்கும் ஆவல் மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கிறது. கதை நீள நீள ஆவலும் அதிகமாகிறது. எப்படி முடியப்போகிறது என்ற எண்ணம் மற்றவற்றையெல்லாம் மறக்கச்செய்து, கேட்பவருடைய உள்ளத்தை அந்தக் கதையில் ஆழ்த்திவிடுகிறது. இந்த இயல்பு, மனிதன் அறிவிலும் கலையிலும் முதிராத காலத்திலேயே உண்டாகிவிட்டது. ஒரு கதை நீண்டுகொண்டே இருக்கும்பட்சத்தில் நாவலாகிறது. நாவல்களை, துப்பறியும் நாவல்,  சமூக நாவல், வரலாற்று நாவல், மொழிபெயர்ப்பு நாவல், தழுவல் நாவல், வட்டார நாவல் எனப் பலவகையில் பிரித்தாலும், வரலாற்று நாவல்களே இன்றுவரை மனிதர்களின் மனதிற்குள் ஆழமாக இறங்கியிருக்கிறது. காரணம், மனித வாழ்வின் அழிந்த தடங்களைப் பற்றி அறிந்துகொள்வதில் எவருக்குமே ஆர்வம் இருக்கத்தானே செய்யும்.

வரலாற்றுக் கதைகளில் அதிசயமும் அற்புதமும் கலந்திருந்தமையால், கேட்ட மக்களுக்கு ஆர்வம் அதிகமாயிற்று, நாள்தோறும் நாம் காணுகிற வாழ்வுக்குப் புறம்பாக, நம்முடைய வாழ்வினும் வளம் பெற்றதாக இருப்பதைக் கேட்கும்போது ஒரு மாய சுகம் உண்டாயிற்று. அதனால் பழங்காலக் கதைகளில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் படிப்பவரின் ரசனைக்கேற்ப உயர்வாகிறது. அக் கதாபாத்திரம்,  எல்லாரினும் உயர்ந்தவராகவும்  எல்லோரைக் காட்டிலும் ஆற்றலுடையவராகவும் யாரிடமும் இல்லாத சிறந்த குணங்களும் ஆற்றலும் அதனிடம் இருப்பதாகவும் நமக்கு எவை எவை கிடைக்கவில்லையோ, நாம் எவற்றிற்காக ஏங்கி நிற்கிறோமோ, அவை அதனிடம் நிரம்ப இருப்பதாகவும் நினைத்து, அத்தகையருடைய கதையைக் கேட்பவர்கள் அல்லது வாசிப்பவர்கள், கதையோடு ஒன்றிச் சில கணம் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவார்கள். இனிய கனவு கண்டவர்களைப் போல கனவில் நுகர இயலாத இன்பங்களை நுகர்ந்ததுபோன்ற திருப்தி அவர்களுக்கு உண்டாயிற்று. இந்தத் திருப்தியே, இந்த மனநிறைவே, கதைகளைக் கேட்கும் ஆவலைத் தூண்டியது.  அப்படிப்பட்ட ஆவலைத் தூண்டும் ஒரு சரித்திரக் கதையே ‘புரவிக்காதலன்’ நாவல். பல்லவ வீரன் ஒருவன், பாண்டிய நாட்டிற்குக் கொண்டுசெல்லும் ஒரு ஓலையிலிருந்து தொடங்கி, நடக்கும் சூழ்ச்சிகளையும் அதை முறியடிக்கும் தந்திரங்களையும் அக்கால இயல்பு மாறாமல் சுவாரசியமாகச் சொல்லியிருப்பதும், 14 அறிமுக எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து, ஒரே நாவலை ஒருவரே எழுதியதுபோல கதையை நகர்த்தியதும் இச் சரித்திர நாவலின் ஆகச்சிறந்த பலம். 

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.