நூல் பெயர் : ஏடகம் (கட்டுரைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
174
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 250
இலக்கிய வகைமைகளில் ஆதி தன்மை கொண்டது கவிதை. கவிதைகளில் வெளிப்படும் கற்பனைகளைக்
கடந்து அதில் ஒளிந்திருக்கும் படிமங்களும் குறியீடுகளுமே அதன் வசீகரம். கவிதைகளை வாசிப்பதும்
அதன் அழகியலை நேசிப்பதும் பின்பு தாம் வாசித்ததையும் நேசித்ததையும் மதிப்புரைகளாக மாற்றி
அதை மற்றவர்களுக்கும் மறுவாசிப்பிற்கு தருவதென்பது உன்னதங்களின் உச்சம். அப்படியாக
பல கவிஞர்களின் கவிதைகளுக்கு எழுதப்பட்ட மதிப்புரைகளை எல்லாம் ஒன்று சேர்த்து தொகுக்கப்பட்டிருப்பதே
‘ஏடகம்’ எனும் நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி
விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நம் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியிடும் மூன்றாவது நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’,
‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர்
விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.