நூல் பெயர் : சுடலைமாடன் வரை (கவிதைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
இரண்டாம் பதிப்பு - 2024
பக்கங்கள் :
122
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 170
கடவுளால் இந்த உலகம் ஜீவிப்பதைப் போல கவிஞனால் இலக்கிய உலகம் ஜீவிக்கிறது.
கவிஞன் வாழ்வியலின் உயிர் நாடியை வெகு எளிதில் அறிந்துவிடுகிறான். மனிதனின் கனவு நிராசைகளின்
நிழலாக நிற்கும்போது கவிஞனின் கனவு வரிகளின் வழியே வரலாறாக மாறி நிற்கிறது. கவிதையில்
ஒளிந்திருக்கும் எல்லாவற்றையும் தேடி அறிந்துகொள்ளத் துடிக்கும் நமக்கு, கவிஞனைத் தேடி
அறிய முடிவதே இல்லை காரணம் அவன் புரியாத புதிர்களின் புதல்வன். கவிஞன் மற்றவர்களுக்கு
எழுதினால் கவிதையாகவும் அவனுக்கே அவன் எழுதிக்கொண்டால் தத்துவமாகவும் ஆகிறது. அப்படிபட்ட
தத்துவார்த்தக் கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கியிருப்பதே ‘சுடலைமாடன் வரை’
எனும் நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி
விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஏற்கனவே பதிப்பித்த இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம்
என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம்
ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின்
‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப்
பெற்றுள்ளார்.