நூல் பெயர் : முன் மாதிரிமங்கலம் (கட்டுரைகள்)
ஆசிரியர் :
பெரியார் சரவணன்
பதிப்பு :
இரண்டாம் பதிப்பு - 2024
பக்கங்கள் :
132
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 180
அனைவருக்கும்
சமமான வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதும், பாதுகாக்கப்பட்ட பண்புகள்
காரணமாக யாரும் வித்தியாசமாக நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துவதும். பன்முகத்தன்மை
என்பது மக்களிடையே உள்ள வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு இந்த வேறுபாடுகளை நேர்மறையாக
மதிப்பிடுவதை உள்ளடக்குவதுமே சமத்துவம். ஒரு ஜனநாயக நாட்டில் சமத்துவ நிகழ்வு என்பது,
ஒவ்வொரு நபரும் அவர்களின் பிறப்பு, ஜாதி, பாலினம், மதம் போன்றவற்றைப் பொருட்படுத்தாமல்
சம எண்ணிக்கையிலான வாய்ப்புகளைப் பெறுவதை மாதிரியுடன் உறுதிசெய்வதும், மேலும் எந்தவொரு
தனிநபருக்கும் எந்த வகையான பொறுப்பு அல்லது வாய்ப்பு அடிப்படையில் பாகுபாடு இல்லை என்பதை
நிலைநாட்டுவதேயாகும். ஆக, சமத்துவம் என்பது ஜனநாயக மாதிரியின் மிக முக்கியமான முன்மாதிரி
பகுதியாகும். அப்படிஉலகத்திற்கே சமத்துவத்தில் முன்மாதிரியாக இருந்த தமிழ்நாட்டின்
மங்கலம் எனும் ஊரில் வாழ்ந்த மனிதர்களின் நிஜமான வாழ்க்கை வரலாற்றை நூலாக்கி இருப்பதே
‘முன்மாதிரி மங்கலம்’ நூல். இதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் காட்சியும் வாசிப்பவரின்
மனதில் சமத்துவத்தை நிரப்பி விட்டுச் செல்லும் என்பதே இந்நூலின் பலம்.
திருச்சி மாவட்டம், திருவரங்கத்தைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும்
கொண்ட படைப்பாளி “பெரியார் சரவணன்” அவர்களுக்கு இது எட்டாவது நூல். பெரியார் கொள்கைகளால்
ஈர்க்கப்பட்டு, தொடர்ச்சியான வாசிப்பு மற்றும் செயல்பாடுகள் மூலம் பெரியாரின் கருத்தியல்களை
இடையறாது பரப்புரை செய்து வருகிறார். பெரியாரின் சித்தாந்தங்களை ஏந்திக் கொண்டு தன்
பெயருக்கு முன்னால் பெரியார் என சேர்த்துக்கொண்டது மட்டுமில்லாமல் சாதி மறுப்பு திருமணத்தையும்
செய்து கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.