நூல் : சாம்பல் ஓவியம்
நூல் வகைமை :
கவிதைகள்
ஆசிரியர் :
பாலை நிலவன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 144
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 248
எதிர்காலத்தில் பெரும் புகழை எய்தக்கூடிய கவிஞன் தன் ஒற்றை
கவிதையின் வாயிலாகத்தான் முதன்முதலில் அறியப்படுகிறான். நெடும் சங்கிலி ஒன்றின் கன்னிகளை
அவன் பூட்டுகிறான். தன் சங்கிலியின் வட்டமொன்றைத் தவிர்த்து அடுத்த சங்கிலியைப் பிணைக்கும்
கவிஞன் பெரும் நீட்சியில் தன் பங்கை ஆற்றிவிட்டுப்போவதோடு பூரணம் எய்துகிறான்.
தனித்த முத்திரை பதித்த கவிஞனின் மெய்க் காப்பாளனாக மாறிவிடுகிறது
மொழி.