நூல் பெயர் : தன்மை முன்னிலை படர்க்கை (கட்டுரைகள்)
ஆசிரியர் : விக்ரமாதித்யன்
பதிப்பு :
இரண்டாம் பதிப்பு - 2024
பக்கங்கள் :
200
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 280
பொதுவாக பேசுவோர் தன்நிலை தன்மை எனவும், எதிரே இருப்பவர் நிலை முன்னிலை எனவும்,
ஒருவர் பேசும் பொழுது, எதிரே கேட்பவர் அல்லாமல் மூன்றாமவர் பற்றியது படர்க்கை எனவும்
தமிழ் மொழி வறையறை செய்து வைத்திருக்கிறது. இவ்வகை வேறுபாடுகளைத் தமிழிலக்கணம் இடம்
என்று வகைப்படுத்துகின்றது. இவ்வகையான இடமானது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று
வகையானது. இவ்வகைமைக்குள் தனித்துவமான உரைநடைகளை உட்புகுத்தி,
எளிமையான சொல்முறையை
வெளிப்படுத்தி,
சமரசங்களற்ற விமர்சனப் பாங்கை நெறிப்படுத்தி, அக்கறையுடனும், ஆத்மார்த்தமான
அர்ப்பணிப்புடனும்,
நம்பிக்கையான தரவுகளுடனும் அவற்றை
ஒருங்கிணைக்கும் மாயக்கலையின்
மொழிநடையுடனும் கட்டுரைகளாகத் தொகுத்திருப்பதே “தன்மை முன்னிலை படர்க்கை” நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி
விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஏற்கனவே பதிப்பித்த இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம்
என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம்
ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின்
‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப்
பெற்றுள்ளார்