logo

நூல் விமர்சனப்போட்டி - 2025


அன்புள்ளம் கொண்ட படைப்பாளிகள் அனைவருக்கும் வணக்கம்.

இந்த ஆண்டின் தொடக்க நிகழ்வாக மற்றும் புதிய முயற்சியாக படைப்பு குழுமம் நூல் ஆசிரியருடன் இணைந்து "நூல் விமர்சனப் போட்டி" நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் படைப்பு முகநூல் தளத்தில் கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

பரிசு விவரம்:

பரிசுத் தொகை: ₹10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்).

பரிசளிப்பவர் விவரம்: எழுத்தாளர் ராம் பிரசாத் மற்றும் படைப்பு குழுமம்

போட்டி விவரம்:

விமர்சனத்திற்கான நூல்கள்:
மரபணுக்கள் / தீசஸின் கப்பல்

ஒருவரே இரண்டு நூல்களுக்கும் விமர்சனம் எழுதலாம்

இரண்டுமே தேர்வு செய்யப்பட்டால் தனித்தனியே பரிசளிக்கப்படும்

விமர்சனம் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 15-02-2025

தேர்வு செய்பவர்: எழுத்தாளர் ராம் பிரசாத் 

முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

போட்டி விதிமுறைகள்:
1. ஒருவர் அதிகபட்சம் ஒரு நூலுக்கு ஒரு விமர்சனம் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். 

2. தாங்கள் தங்களின் விமர்சனத்தை அனுப்பும்போது, உங்களின் சுயவிபரமான பெயர், மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்ணையும் அனுப்பவும். இது தாங்கள் தேர்வு செய்யப்பட்டால் முடிவுகளை தங்களை தொடர்பு கொண்டு அறிவிக்க மட்டுமே.

2. விமர்சனத்தை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. போட்டி ஆரம்பம் ஆகி கடைசி தேதி (15-02-2025) இந்திய நேரம் இரவு 12 மணி வரை எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம். விமர்சனம் அனுப்பியவர்களின் பெயர் பட்டியல் படைப்பு குழும முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்படும்.

3. விதிமுறைக்கு உட்பட்டு எழுதப் படாத படைப்புகளை தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள இயலாது. எழுத்தாளரின் தேர்வே இறுதியானது.

4. போட்டிக்கு வந்த விமர்சனத்தில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் விமர்சனத்திற்கு, சிறந்த விமர்சனத்திற்கான சான்றிதழும், பரிசுத் தொகையும், நமது படைப்பு சங்கமம் விழாவில் மிகச்சிறந்த ஆளுமைகளின் கரங்களால் வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

5. போட்டி முடியும்  நாளான 15-பிப்ரவரி-2025 (சனிக்கிழமை இரவு பனிரெண்டு மணிக்கு மேல்) அன்று விமர்சனத்தை போட்டிக்கு அனுப்பியவர்கள் உங்கள் நட்பு வட்டத்திற்கோ, பொது மக்கள்  பார்வைக்கோ எங்கு வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

6. உங்கள் ஒத்துழைப்பு இந்த போட்டியை திறம்பட நடத்திட முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த போட்டி  அறிவிப்பை முடிந்த வரை பகிருங்கள். உலகத்தமிழர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாக அமையும். வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப்படும்.

நூல்கள் பெற்றுக் கொள்ள மற்றும் கூடுதல் தகவல்களுக்கு : 73388 97788 / 73388 47788 

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம் 
 

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.