படைப்பின் அடுத்த அரவணைப்பு - படைப்பாளி ரமேஷ் பிரேதன்
படைப்பு கவிஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களை தத்தெடுத்து அரவணைத்துக் கொள்கிறது படைப்பு குழுமம்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு ஆயுள் முழுக்க அவருக்கான உணவு மற்றும் மருத்துவ செலவுகளை ஏற்று மாதந்தோறும் கொடுக்க இருக்கிறோம்
கவிஞர் காப்பீட்டுத் திட்டம் - ஒரு பார்வை:
இலக்கிய உலகில் முதல் முறையாக... படைப்பாளிகளை அரவணைக்கும் கரங்களாக... படைப்புக் குழுமம் தொடங்கிய திட்டமே கவிஞர் காப்பீட்டுத் திட்டம் .மூன்று பெரும் பிரிவுகளில் இத்திட்டம் செயலாற்ற இருக்கிறது.
பசிப்பிணி தீர்க்கும் குடும்ப நலநிதி,
வருங்கால சந்ததிக்கான கல்விநிதி,
எதிர்பாரா விபத்து அல்லது இழப்புகள் என்றால் மருத்துவ நிதி...
இந்த மூன்றையும் ஒரே திட்டமாக ஒருங்கிணைப்பதே கவிஞர் காப்பீட்டுத் திட்டம்.
எந்தவொரு பின்புலமும் இல்லாத, வாழ்வாதாரம் இழந்து நிற்கும், வறுமைக்கோட்டில் தன் வரிகளுக்கான கேள்விக்குறியாக இருக்கும் கவிஞர் களுக்கான இந்த முழு இலவச நிதி உதவித் திட்டத்தினை படைப்புக்குழுமம் பெருமையோடு அறிமுகப்படுத்துவதோடு உதவிக்கரமும் நீட்டுகிறது.
இதன் முதல் பயனாளியாக கவிஞர் ஜெ.பிரான்ஸிஸ் கிருபா அவர்களை அரவணைத்துக் கொணடது. இப்போது இரண்டாவதாக எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களையும் தத்தெடுத்து அரவணைத்துக் கொண்டது. அதன்படி இனி வாழ்நாள் முழுக்க அவர்களுக்கான உணவு, மருத்துவம் மற்றும் உறைவிடத்துக்கான வாழ்வாதார செலவுகளை படைப்பு கவிஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும்.
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் - ஒரு பார்வை:
பெயர்: ம. ரமேஷ் @ ரமேஷ் பிரேதன்
ஊர்: புதுச்சேரி
அவர் எழுதிய நூல்கள்
கவிதைகள்
இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும்
கறுப்பு வெள்ளைக் கவிதை
பேரழகிகளின் தேசம்
சக்கரவாளக் கோட்டம்
கொலை மற்றும் தற்கொலை பற்றி
உப்பு
நாவற்கொம்பு
அதீதனின் இதிகாசம் (காவியம்)
காந்தியைக் கொன்றது தவறுதான்
சாராயக்கடை
பன்றிக்குட்டி
அயோனிகன் (காவியம்)
மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்
நடுநிசி மதியம்
நாவல்கள்
1. நல்லபாம்பு: நீல அணங்கின் கதை
2. ஐந்தவித்தான்
3. அவன் பெயர் சொல்
4. சொல் என்றொரு சொல்
5. புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்
6. பொந்திஷேரி
7. ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து (மீபுனைவு)
கதைகள்
முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன
கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள்
பரதேசி
மகாமுனி
குருவிக்காரச் சீமாட்டி
நாடகம்
ஆதியிலே மாம்சம் இருந்தது (ஐந்து நாடகங்கள்)
இரண்டு பிரெஞ்சு நாடகங்கள் (மொழிபெயர்ப்பு)
கட்டுரைகள்
சிதைவுகளின் ஒழுங்கமைவு
கட்டுரையும் கட்டுக்கதையும்
பேச்சு மறுபேச்சு
பிற
கி. ரா. எழுத்துலகம்
இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்
விருதுகள்
1998 ஆம் ஆண்டு, கவிதைக்கெனப் புதுவை அரசின் கம்பன் விருது
1999 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியா சின்னத்தம்பி வாத்தியார் நினைவு
அறக்கட்டளை விருது
2001 ஆம் ஆண்டு, நாவலுக்கெனப் புதுவை அரசின் கம்பன் விருது
2010 ஆம் ஆண்டு, சுஜாதா கவிதை விருது
2011 ஆம் ஆண்டு களம்புதிது கவிதை விருது
2017 ஆம் ஆண்டு கி. ரா. கரிசல் அறக்கட்டளை விருது.
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்கள் பேசிய உரை விரைவில் வெளியிடப்படும்.
கவிஞர் பிரான்ஸிஸ் கிருபா அவர்கள் பேசிய நெகிழ்ச்சியான உரை ( https://youtu.be/aatiV_3pAgc ) இணைக்கப் பட்டுள்ளது. கவிஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றிய முதல் அறிவிப்பை படைப்பு இணையதளத்தில் ( https://padaippu.com/announcement/24 ) பார்க்க.
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.