logo

சர்வதேச மகளிர் காணொளி பேச்சுப்போட்டி - 2022



அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

முதல் முறையாக WRC ( Women's Renaissance Centre) மற்றும் படைப்பு குழுமம் இணைந்து நடத்தும் சர்வதேச அளவில் மகளிருக்கான மாபெரும்  பேச்சுப்போட்டி  இந்தாண்டு முதல் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

போட்டியாளர்களின் விவரம்:
20 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும்(Group A), 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும்(Group B)
பிரிக்கப்பட்டு பரிசுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம், மூன்றாம்  மற்றும் சிறப்பு பரிசுகள் தனித்தனியே வழங்கப்படும்.

பரிசு விவரம்:
மொத்த பரிசு : 50000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐம்பதாயிரம் ரூபாய்).

Group A - 20 வயதிற்கு உட்பட்டவர்கள்:

முதல் பரிசு :  10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

இரண்டாம் பரிசு : 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐயாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

மூன்றாம் பரிசு : 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் மூவாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

சிறப்பு பரிசு : 3 நபர்கள் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா 1000 ரூபாய்)

மக்கள் பேச்சாளர் விருது : 4000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நான்காயிரம் ரூபாய் ஒருவருக்கு)

பரிசுத்தொகை 25000 ரூபாயிலிருந்து Group A இல் வெற்றி பெரும் 7 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

Group B - 20 வயதிற்கு மேற்பட்டவர்கள்:

முதல் பரிசு :  10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

இரண்டாம் பரிசு : 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐயாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

மூன்றாம் பரிசு : 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் மூவாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

சிறப்பு பரிசு : 3 நபர்கள் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா 1000 ரூபாய்)

மக்கள் பேச்சாளர் விருது : 4000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நான்காயிரம் ரூபாய் ஒருவருக்கு)

பரிசுத்தொகை 25000 ரூபாயிலிருந்து Group B இல் வெற்றி பெரும் 7 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

ஆக மொத்தம், பரிசுத்தொகை 50,000 ரூபாயிலிருந்து Group A & B இல் வெற்றி பெரும் 14 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

பரிசளிப்பவர் விவரம்: WRC ( Women's Renaissance Centre) 

போட்டி விவரம்:

தலைப்பு : மாண்புமிகு மகளிர்

கால அளவு: மூன்று நிமிடங்கள்

கரு: மகளிர் சம்பந்தமான எந்தக் கருவிலும் பேசலாம் . அது பெண்மை, தாய்மை, பெண்ணடிமை, புதுமைப்பெண், பெண் சுதந்திரம், பெண் கல்வி, பெண் சமூகம், இப்படியாக பெண் சார்ந்து, அவர்களுடைய உரிமை சார்ந்து, அவருடைய வாழ்வியலை சார்ந்து, அவர்களுடைய அறிவுத் திறமையை சார்ந்து, எந்த மாதிரியான கருப்பொருளிலும் பேசலாம்.  ஆனால் கண்டிப்பாக பெண் சம்பந்தமான கருவை மட்டுமே எடுத்து பேச வேண்டும்.

பங்கு பெறுவோர்: மகளிர் மட்டும்

கடைசி நாள் : 05-மார்ச்-2022 இரவு மணி 12 வரை

பதிவு செய்யப்பட்ட காணொளி அனுப்ப: 
 காணொளியை +91 7338897788 (வாட்ஸாப் வழியே) என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

போட்டி நடுவர் : பேச்சாளர் கவிதா ஜவகர்

முடிவு அறிவிப்பு நாள் : 15-மார்ச்-2022 

காணொளி ஒளிபரப்பு:  https://youtube.com/c/PadaippuTV

போட்டி விதிமுறைகள்:

1. ஒருவர் அதிகபட்சம் ஒருமுறை மட்டுமே பேசி வீடியோவில் பதித்து அனுப்ப வேண்டும். காணொளி கேட்கவும் பார்க்கவும் தெளிவாக இருத்தல் சிறப்பு. சர்வதேச அளவில் நடப்பதால் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் அனுப்பலாம் ஆனால் பெண்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும் இப்போட்டிக்கு.

2. பேசி அனுப்பும் காணொளி மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

3. போட்டிக்கு அனுப்பும் காணொளியைப் போட்டி முடிந்து பரிசு அறிவிக்கும் வரை வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. போட்டிக்கு வந்த காணொளிகள் எல்லாம் ஆய்வு செய்யப்படும். பிறகு ஒவ்வொரு காணொளியும் தனித்தனியாகப்  படைப்பு மீடியாவின் (YouTube) போட்டிப் பகுதியில் 06-மார்ச்-2022 அன்று ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிடப்படும். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. போட்டிக்கான அனைத்துப் பரிசுகளையும் நடுவர் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார். நடுவர் தீர்ப்பே இறுதியானது.

5. நடுவர் தேர்வு செய்யும் பரிசில்லாமல் யூட்டுயூப் (YouTube) இல் பொதுமக்கள் கொடுக்கும் லைக், கமெண்ட்ஸ், பகிர்வு மற்றும் வீவ் கவுண்ட் (பார்வை எண்ணிக்கை) வைத்து மக்கள் செல்வாக்குமிக்க பேச்சாளர் என்ற சிறப்பு விருதும் பரிசு பணமும் பிரத்யேகமாகக் கொடுக்கப்படும்.

6. போட்டிக்குக் காணொளியை அனுப்பும்போது கட்டாயம் மகளிர்/பெண் பெயர், வயது, ஊர் பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை எழுதியும், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். 

7. பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு நாம் நடத்தும் விழாவில் நேரடியாகச் சான்றிதழ் வழங்கப்படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடித்த தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அப்போது அளிக்கப்படும். அங்கு மக்கள் செல்வாக்கு மிக்க பேச்சாளர் என்ற அங்கீகாரம் பெற்ற பேச்சாளரும் கவுரவிக்கப்படுவார்.

8. 2021ல்2 - மார்ச் 05ஆம் தேதிக்கு மேல் வரும் காணொளிகளைப் போட்டிக்குத் தேர்வு செய்ய இயலாது.

9. வணக்கம் சொல்லிவிட்டு நேரடியாகத் தலைப்புக்குள் சென்றுவிடலாம். கால அளவு மூன்று நிமிடங்கள் என்பதால் மற்ற வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் சொல்லி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

10. ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒருமுறை மட்டுமே பேசி அனுப்ப வேண்டும். ஒருமுறை அனுப்பி விட்டால் மீண்டும் மாற்ற இயலாது என்பதை நினைவில் கொள்க.

11. மகளிர் மட்டுமே போட்டியில் பங்கு பெற இயலும். மகளிரை தவிர்த்து வேறு யாரும் போட்டியில் பங்கேற்க இயலாது அப்படியே பங்கேற்று போட்டிக்காக பேசி அனுப்பினாலும் அவர்களுடைய காணொளி போட்டிக்காக எடுத்துக் கொள்ள மாட்டாது. இது முழுக்க முழுக்க மகளிருக்கான போட்டி என்பதை நினைவில் கொள்க.

12. விதிமுறைக்கு உட்பட்டு வராத காணொளிகளைத் தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக்கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பு மட்டுமே இறுதியானது. 

உங்கள் ஒத்துழைப்பே இந்தப் போட்டி நடந்து முடிய முக்கியக் காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இந்தத் தகவலை முடிந்தவரை பகிருங்கள். சர்வதேச அளவில் உள்ள தமிழ் மகளிர்/பெண்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

சமூகத்தில் மகளிருக்கான இடம் தனித்துவமானதாக வருங்காலத்தில் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மகளிர் மேம்பாட்டுக்காக, WRC அமைப்பு படைப்பு குழுமத்துடன் இணைந்து இம்மாதிரியான ஒரு முயற்சியை எடுத்துள்ளோம். ஒத்துழைப்பு தாருங்கள் இதை சாத்தியமாக்க நம்முடன் கைகோர்த்துள்ள  நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை சமர்ப்பிக்கிறோம்

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம் 


Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • K.Kavitha Avatar
    K.Kavitha - 2 years ago
    இந்த போட்டிக்கான முடிவு என்று அறிவிக்கப்படும்?

  • Devika Kulasekaran Avatar
    Devika Kulasekaran - 2 years ago
    வணக்கம்! 1) காணொளியினை படுக்கைவாட்டில் - horizontal ஆக திறன் பேசியை வைத்துக் கொண்டு எடுக்க வேண்டுமா? 2) காணொளியினை எடுக்கும் போது திறன் பேசியில் rotate off mode ல் இருக்க வேண்டுமா? உடன் தெரிவிக்கவும். நன்றி! - தேவிகா குலசேகரன், சேலம்.

  • Sakthiarulanandhamsakthi Sakthiarulanandhamsakthi Avatar