logo

பள்ளி மாணவர்களுக்கான சர்வதேச காணொளி பேச்சுப்போட்டி



அன்புள்ளம் கொண்ட இளம் தலைமுறையினருக்கு அன்பார்ந்த வணக்கங்கள்...

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த "சர்வதேச காணொளி பேச்சுப்போட்டி"யைப் பள்ளி மாணவர்களுக்காகப் பிரத்யேகமாக நடத்த படைப்புக் குழுமம் திட்டமிட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மிக வெற்றிகரமாக நடந்ததன் தொடர்ச்சியாக இப்போட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன... தயவுகூர்ந்து பொறுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்துப்பகுதியில் (கமெண்ட்ஸ்) கேட்டுத் தெரிந்துகொள்ளவும்...

போட்டி விவரம்: 
1 லிருந்து 6 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் (ஜுனியர்ஸ்), 7 லிருந்து 12 வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும்(சீனியர்ஸ்) பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம், மூன்றாம்  மற்றும் சிறப்பு பரிசுகள் தனித்தனியே வழங்கப்படும்.

பரிசு விவரம்:
மொத்தப் பரிசு : 40,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்).

முதல் பரிசு : இரு நபர் - 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஐந்தாயிரம் ரூபாய்).

இரண்டாம் பரிசு : இரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா இரண்டாயிரத்தி ஐநூறு ரூபாய்).

மூன்றாம் பரிசு : இரு நபர் - 2000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்).

மக்கள் பேச்சாளர் விருது : 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் மூன்றாயிரம் ரூபாய்)

ஆக மொத்தம், பரிசுத்தொகை 20,000 ரூபாயானது, வெற்றிபெறும் 7 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாகப் பகிர்ந்து அளிக்கப்படும். மேலும் முதல் பரிசு பெறும் இரு மாணவர்/மாணவியரின் பள்ளிகளுக்குச்  சுழற்கோப்பை வழங்கப்படும். மேலும் சிறப்பாக பங்களிப்பு செய்யும் 20 மாணவர்/மாணவியருக்கு(ஒவ்வொரு பிரிவிலும் தலா 10), இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்கள் பரிசளிக்கப்படும்.

போட்டி விவரம்:

தலைப்பு: இனி ஒரு விதி செய்வோம்

கால அளவு: மூன்று நிமிடங்கள்

பதிவு செய்யப்பட்ட காணொளி அனுப்ப: 
ஜுனியர்ஸ் பிரிவு (1 லிருந்து 6 ஆம் வகுப்பு வரை) காணொளியை +91 73589 79406 (வாட்ஸாப் வழியே) என்ற  எண்ணிற்கும், சீனியர்ஸ் பிரிவு (7 லிருந்து 12 வகுப்பு வரை) காணொளியை +91 82486 93805 (வாட்ஸாப் வழியே) என்ற எண்ணிற்கும் அனுப்ப வேண்டும்.

ஜுனியர்ஸ் பிரிவு (1 லிருந்து 6 ஆம் வகுப்பு வரை) பேசும் விதிமுறை:
-------------------------------------------
உங்களுக்குத் தோன்றும் சொந்த கருத்துகளைத் தொகுத்தும் பேசலாம் அல்லது பாரதியாரின் புரட்சிக்கவிதைகளை மூன்று நிமிடத்திற்குள் சொல்லலாம்.

சீனியர்ஸ் பிரிவு (7 லிருந்து 12 வகுப்பு வரை) பேசும் விதிமுறை:
--------------------
சமூகத்தில் இதுவரையில் நீங்கள் கண்ட சமூக அவலங்களை சுட்டிக்காட்டி,இனி அவ்வாறு நடக்காதிருக்க தீர்வுகளைச் சுட்டலாம் அல்லது உங்களுக்கான மாற்றுச்சிந்தனை,எதிர்கால கனவுகள் குறித்தும் பேசலாம்
அல்லது ஒரு துறை சார்ந்து சமூக அவலத்தை மையப்படுத்தி,அதில் நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளைத் தொகுத்து பேசலாம்.சான்றாக பெண் சார்ந்த வன்முறைகள்,சட்டம்,விவசாயம்,கல்வி, மருத்துவம்,உணவு இப்படி எது வேண்டுமாகவும் இருக்கலாம் அல்லது புதிய விதிகள் நம் நாட்டிற்கும், உலகத்திற்கும் எவ்வளவு தேவை என்பதை பாரதியின்வழி நீங்களும் கூறலாம் அல்லது உங்களுக்குத் தோன்றும் சொந்த கருத்துகளைத் தொகுத்தும் பேசலாம்.

கடைசி நாள் :16-ஜனவரி-2021 இரவு மணி 12 வரை

போட்டி நடுவர் : படைப்பாளி ஈரோடு மகேஷ், பேச்சாளர், ஊடகவியலாளர் 

முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

காணொளி ஒளிபரப்பு: https://youtube.com/c/PadaippuTV
போட்டி விதிமுறைகள்:

1. ஒருவர் அதிகபட்சம் ஒருமுறை மட்டுமே பேசி வீடியோவில் பதித்து அனுப்ப வேண்டும். காணொளி கேட்கவும் பார்க்கவும் தெளிவாக இருத்தல் சிறப்பு. சர்வதேச அளவில் நடப்பதால் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் அனுப்பலாம்.

2. பேசி அனுப்பும் காணொளி மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

3. போட்டிக்கு அனுப்பும் காணொளியைப் போட்டி முடிந்து பரிசு அறிவிக்கும் வரை வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. போட்டிக்கு வந்த காணொளிகள் எல்லாம் ஆய்வு செய்யப்படும். பிறகு ஒவ்வொரு காணொளியும் தனித்தனியாகப்  படைப்பு டிவியின் (YouTube) போட்டிப் பகுதியில் 16-ஜனவரி-2021 அன்று ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிடப்படும். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. போட்டிக்கான அனைத்துப் பரிசுகளையும் நடுவர் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார். நடுவர் தீர்ப்பே இறுதியானது.

5. நடுவர் தேர்வு செய்யும் பரிசில்லாமல் யூட்டுயூப் (YouTube) இல் பொதுமக்கள் கொடுக்கும் லைக், கமெண்ட்ஸ், பகிர்வு மற்றும் வீவ் கவுண்ட் (பார்வை எண்ணிக்கை) வைத்து மக்கள் செல்வாக்குமிக்க இளம் பேச்சாளர் என்ற சிறப்பு விருதும் பிரத்யேகமாகக் கொடுக்கப்படும்.

6. போட்டிக்குக் காணொளியை அனுப்பும்போது கட்டாயம் மாணவர்/மாணவி பெயர், வகுப்பு, படிக்கும் பள்ளி  பெயர், ஊர் பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை எழுதியும், புகைப்படம் மற்றும் பள்ளியின் ஐடி கார்ட் (அடையாள அட்டை) ஆகியவற்றை நகல் படம் எடுத்தும் இணைத்து அனுப்ப வேண்டும். 

7. போட்டியில் பங்குகொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் 'பங்கேற்பாளர் மின்சான்றிதழ்' நடுவராக இருக்கும் படைப்பாளி ஈரோடு மகேஷ், பேச்சாளர் , ஊடகவியலாளர் அவர்கள் கையொப்பமிட்டு வழங்கப்படும்.

8. பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு நாம் நடத்தும் விழாவில் நேரடியாகச் சான்றிதழ் வழங்கப்படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடித்த தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அப்போது அளிக்கப்படும். அங்கு மக்கள் செல்வாக்கு மிக்க இளம் பேச்சாளர் என்ற அங்கீகாரம் பெற்ற பேச்சாளரும் கவுரவிக்கப்படுவார்.

9. 2021 - ஜனவரி 16ஆம் தேதிக்கு மேல் வரும் காணொளிகளைப் போட்டிக்குத் தேர்வு செய்ய இயலாது.

10. வணக்கம் சொல்லிவிட்டு நேரடியாகத் தலைப்புக்குள் சென்றுவிடலாம். கால அளவு மூன்று நிமிடங்கள் என்பதால் மற்ற வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் சொல்லி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

11. ஒரே பள்ளியிலிருந்து எத்தனை மாணவ மாணவிகள் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒருமுறை மட்டுமே பேசி அனுப்ப வேண்டும். ஒருமுறை அனுப்பி விட்டால் மீண்டும் மாற்ற இயலாது என்பதை நினைவில் கொள்க.

12. விதிமுறைக்கு உட்பட்டு வராத காணொளிகளைத் தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக்கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பு மட்டுமே இறுதியானது. 

உங்கள் ஒத்துழைப்பே இந்தப் போட்டி நடந்து முடிய முக்கியக் காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இந்தத் தகவலை முடிந்தவரை பகிருங்கள். சர்வதேச அளவில் உள்ள தமிழ் மாணவ/மாணவியர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.

வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப்படும்.

போட்டியை வெற்றி பெறச் செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Kailash Avatar
    Kailash - 3 years ago
    Sir please intimate prize distribution date and venue

  • Kailash Avatar
    Kailash - 3 years ago
    My son participated ini oru vidhi seivome speech competition. He was selected makkal selvaku milka illam pechalar viruthu.when will give prize sir.please intimate function date my mobile no 9789295321

  • YUVARAJ K Avatar
    YUVARAJ K - 3 years ago
    வணக்கம்,என் மகள் சஞ்ஜனா சேலம்,குளூனி மேல்நிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.1 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் "இனி ஒரு விதி செய்வோம் " என்ற தலைப்பில் எனது மகள் பேசிய காணொளியை தாங்கள் குறிப்பிட்டிருந்த(7358979406) வாட்ஸ்அப் எண்ணிற்கு இன்று( 31-12-2020)மாலை 6மணியளவில் அனுப்பினேன. எனது மகளின் மேற்படி காணொளியை இதுவரை தாங்கள் பார்க்கவில்லை மேலும் இன்று கடைசி நாள் என்பதால் தங்களது மேலான கவனத்திற்கு தெரியப்படுத்துகிறேன்.எனவே தாங்கள் மேற்படி எனது மகளின் காணொளியை பார்த்து மேற்படி போட்டியில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.நன்றி

  • Manivannan Malaiarasan Avatar
    Manivannan Malaiarasan - 3 years ago
    வணக்கம். எங்கள் மகள் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அவர் பேசிய காணொளியும் மற்ற மாணவர்களின் காணொளியும் தங்களது வலையொலியில்(youtube) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது, ஆனால் தற்போது அந்த காணொளிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதே அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாமா?

  • Eyazhini Avatar
    Eyazhini - 3 years ago
    College complete panirken sir ithula participate panalama

  • Thirunavukkarasu R Avatar
    Thirunavukkarasu R - 3 years ago
    Respected Team, Good Evening I am Thirunavukkarasu from Attur - Salem Dist , My son Master. Mugilarasan is participating in the speech competition Event "Ini Oru Vithi Seivom". To which whatsapp number or the link we should send our recorded video. Please send the number or link Awaiting for your favourable reply Thank you Thirunavukkarasu R - Narasingapuram Attur Salem - 636108

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    மேலே மிக தெளிவாக அறிவிப்பில் கொடுக்கப் பட்டுள்ளது. பார்க்க

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    பதிவு செய்யப்பட்ட காணொளி அனுப்ப: ஜுனியர்ஸ் பிரிவு (1 லிருந்து 6 ஆம் வகுப்பு வரை) காணொளியை +91 73589 79406 (வாட்ஸாப் வழியே) என்ற எண்ணிற்கும், சீனியர்ஸ் பிரிவு (7 லிருந்து 12 வகுப்பு வரை) காணொளியை +91 82486 93805 (வாட்ஸாப் வழியே) என்ற எண்ணிற்கும் அனுப்ப வேண்டும்.