logo

வாழ்த்துமடல் - வேர்த்திரள் பரிசுப் போட்டி - 2019


அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்... நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப் போட்டியின் நடுவராக இருந்து போட்டியை சிறப்பாக நடத்தி கொடுத்த கவிஞர் கல்யாண்ஜி (வண்ணதாசன்) அய்யா அவர்களின் வாழ்த்துமடல் இதோ.

மிக அதிக பணிச்சுமைகளுக்கு இடையிலும் நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்போட்டியை மிக சிறப்புற நடத்தி கொடுத்தது மட்டுமில்லாமல் நம் படைப்பு குழுமத்தின் உறுப்பினர்களுக்காக தாங்கள் கைப்பட ஒரு வாழ்த்துமடல் எழுதி தர வேண்டும் என கேட்டுக் கொண்டதும் உடனே இசைவு தெரிவித்து அதையும் சிரமம் பாராமல் கொடுத்ததற்கு மிக்க நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். நம் படைப்பு குழுமத்தின் அனைவரின் சார்பாகவும் கவிஞர் கல்யாண்ஜி (வண்ணதாசன்) அய்யா அவர்களுக்கு இந்த தருணத்தில் அன்பின் நன்றியை சமர்ப்பிக்கிறோம்.

இப்போட்டியை சிறப்பாக நடத்த உதவிய இப்படைப்பு குழும உறுப்பினராகிய உங்களுக்கும் படைப்பு குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்... இன்னும் ஒரு மகிழ்ச்சி காத்திருக்கிறது...

அது என்னவென்றால்... இந்த போட்டிக்காக எழுதிய அனைத்து கவிதைகளையும் ஆராய்ந்து சிறந்ததாக கருதப்படும் கவிதைகள் அனைத்தும் நாம் முன்பே கூறியது போல கவிதை நூலாக வெளிவர இருக்கிறது. புத்தக வெளியீட்டு விழா நமது குழுவின் ஆண்டு விழாவில் இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்கே வளரும் படைப்பாளிகளை தட்டிக்கொடுத்து வாழவைக்க வேண்டும் என்றும் பல படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டும் வாழும் இக்கால அனுபவமிக்க கவிஞர்களில் கவிஞர் கல்யாண்ஜி (வண்ணதாசன்) அய்யா அவர்கள் முதன்மையானவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

இப்படி படைப்பாளிகளுக்காக வாழும் இந்த கவிஞரை நமது நன்றியின் அரவணைப்பில் மகிழ்விப்போம் வாருங்கள்.

நமக்காக வாழ்த்து சொன்ன இந்த மகா கவிஞருக்காக நம் குழுவின் சார்பாக நாம் நமது கருத்து பகுதியில் வாழ்த்தி மகிழ்வோம்.

குறிப்பு: கவிஞர் கல்யாண்ஜி (வண்ணதாசன்) அவர்கள் தேர்வு செய்த வெற்றியாளர்களின் பட்டியல் வந்து சேர்ந்தது. சான்றிதழ் தயாரிக்கும் பணி தொடங்கியது. வரும் புதன் முதல் படிப்படியாக பரிசுப்பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.

வாருங்கள் வாழ்த்துவோம்...
வளர்வோம் வளர்ப்போம்,

படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.