சென்னையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான திரு. முனிவரதன் அவர்களுக்கு, படைப்பு அறக்கட்டளை மூலம் 18-07-2020 அன்று மிதிவண்டி வாங்கி கொடுக்கப்பட்டது.
தனது வாழ்வாதாரத்திற்கு பயன்படும் வகையில் மிதிவண்டி ஒன்றை வாங்கித்தந்து உதவ இயலுமா என படைப்பு குழுமத்திடம் விண்ணப்பித்து இருந்தார் அவரது கோரிக்கையை ஏற்று அவருக்கு பயனளிக்கும் வகையிலும் அதனால் அவர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையிலும் புதியதாக மிதிவண்டி ஒன்றை வாங்கிக் கொடுத்து நேசக்கரம் நீட்டியது படைப்பு. அவருக்கு ஏற்றதுபோல் இருக்க வேண்டும் என்று அவரையே சென்னையில் உள்ள சைக்கிள் ஷோரூமுக்கு நேரடியாக அழைத்துச் சென்று அவருக்குப் பொருத்தமான பிடித்தமான சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்து நம்பிகை கொடுத்தோம்.
உதவி என்பது என்ன செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது எவ்வளவு செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது யாருக்குச் செய்கிறோம் எனபது அல்ல
உதவி என்பது எப்போது செய்கிறோம் என்பதைப் பொருத்தது.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
உதவும் உள்ளம் இறைவன் இல்லம்
படைப்பு - சமூகத்தின் இணைப்பு