நூல் பெயர் : நினைவும் புனைவும்
(கட்டுரை )
ஆசிரியர் : யாழினி ஆறுமுகம்
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 102
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 100
நினைவுகள் எப்போதும் ஆதர்சனமானவை காரணம் அவை எப்போதும் மனதுக்குள் மொட்டவிழ்த்து புன்னகை வழியே பூக்கும் புது மலர். அப்புன்னகை என்பது ஒருவர்க்கு மகிழ்வின் கிளையாக இருக்கலாம் அல்லது துயரின் வேறாக இருக்கலாம். நடக்கபோவதைப் பற்றி நாம் நினைப்பதெல்லாம் நினைவுகள் அல்ல மாறாக நடந்த நிகழ்வுகளை அசைபோடுவதும், இன்பமோ துன்பமோ எதுவாகினும் அதை நினைத்து மனக்கடலில் நீந்துவதுமே நினைவுகள். புனைவு என்பது நினைவுக்கு எதிர்த்திசையில் கற்பனையின் அடிப்படையில் பயணிக்கும் புதிர். இப்படியாக தனக்குள் பாதிப்பு ஏற்படுத்திய நூல்களைப்பற்றியும், பால்ய வீதிகளில் பறந்ததைப் பற்றியும், அனுபவ அகழ்வலைகளைகளின் அதிர்வலைகளைப் பற்றியும், எதிரெதிர் திசையில் பயணிக்கும் நினைவுகளையும் புனைவுகளையும் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருப்பதே 'நினைவும் புனைவும்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் எல்லோருக்கும் புரியும் வகையில் மிக எளிய நடையில் இருப்பதும் அது நினைவுகளை வாசிப்பவர் மனதில் விதைத்து விட்டுப் போவதும் இத்தொகுப்பின் பலம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எனும் ஊரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி யாழினி ஆறுமுகம் அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இவர் 'விதைகள் வாசகர் வட்டம்' எனும் இலக்கிய அமைப்பின் தலைவராக இருந்துகொண்டு ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்துவது போன்ற எண்ணற்ற இலக்கியம் , சமூக சேவைகளைச் செய்து வருகிறார். இணையத்தில் பல தளங்களிலும் இவர் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் என தேர்வு செய்யப்பட்டு பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.