logo

நிசப்தம் விழுங்கும் காடுகள்


நூல் பெயர்    :  நிசப்தம் விழுங்கும் காடுகள்
                      (கவிதை )

ஆசிரியர்    :  ப.தனஞ்ஜெயன்   

பதிப்பு            :  முதற்பதிப்பு - 2022

பக்கங்கள்    :  114

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்    :  படைப்பு டிசைன் டீம் 

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு பிரைவேட் லிமிடெட், சென்னை
  
வெளியீடு            :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ 120
காடு என்பது மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி. தமிழில் காட்டுக்கு கா, கால், கான், கானகம், அடவி, அரண், அரணி, புறவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல் எனப் பல பெயர்கள் இருந்தாலும் உழவர்கள் காட்டை உழுது பயிர் செய்யும் வயல் + காடு = வயற்காடு என அழைப்பதையே வழக்கமாக்கி விட்டனர். வயல் என்பது அவர்களின் வாழ்க்கையின் துணை என்பதால் வயலும் வாழ்வும் என்பதே சொற்றொடராகி விட்டது. இப்படியாக இயற்கை காடு முதல் இடுகாடு வரை வாழ்வின் நிலங்களை எல்லாம் விளைநிலங்களின் ஊடாக காட்சிப்படுத்துவதே 'நிசப்தம் விழுங்கும் காடுகள்' நூல். இதில் உள்ள  ஒவ்வொரு கவிதையும் விவசாயம் விளைநிலம் அதன் மகிமையும் வறுமையும் படம் பிடித்துக்காட்டுவது போல இருப்பது இத்தொகுப்பின் பலம்.

புதுச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  படைப்பாளி ப.தனஞ்ஜெயன் அவர்களுக்கு இது ஐந்தாம் தொகுப்பு. இவர் இதற்கு முன்பு படைப்பு பதிப்பகம் மூலம் மூன்று நூல்களை வெளியிட்டு இருக்கிறார். அவை பலராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவரது பல படைப்புகள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகி வருகின்றன. மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த  படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தை இரண்டு முறை பெற்றவர் மேலும் படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.