Events

அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி - 2019:

அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த "அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி" இந்தாண்டும் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் வித்தியாசமான முறையில்...

About Us

நம் ஒவ்வொருவரைப் போல 'ஜின்னா அஸ்மி' என்று அனைவராலும் அறியப்பெற்ற முகமது அலி ஜின்னாவிற்கும் ஒரு கனவு இருந்தது. ஒரு சிறிய தேநீர் சந்திப்பில் அவரின் கனவு விதை விழித்துக்கொள்ள படைப்பு என்ற குழுமம் உருவானது. இரண்டு பேரில் தொடங்கி தற்போது 50000 இற்கு மேல் அங்கத்தினர்களுடன் முகநூலில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஒரு குழந்தையின் ஆரம்பத் துள்ளலுடன் ஏப்ரல் 2, 2016 இல் வைத்த படைப்பின் முதல் முயற்சி தற்போது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு அறக்கட்டளையாக உங்களின் முன் பல பிரிவுகளுடன் வளர்ந்திருக்கிறது.

படைப்பு தகவு: சிறுகதை, கட்டுரை, வாழ்வியல் தொகுப்பு, சரித்திரம், என பன்முக மாதாந்திர கலை இலக்கிய திங்களிதழ், விரைவில் புத்தக வடிவில் உங்கள் கைகளில். இது வாசகனின் களம். வாசிப்பின் தளம்.

படைப்பு கல்வெட்டு: சிறந்த படைப்புகளின் மாதாந்திர கவிதை மின்னிதழ் தொகுப்பு. இது வரை பரிசு கொடுத்து மேடையில் அடையாளம் காண வைத்த மொத்த கவிஞர்களின் எண்ணிக்கை 150 க்கு மேல். இது கவிஞர்களின் பங்களிப்பு. கவிதைகளின் சங்கமிப்பு.

படைப்பு கவிச்சுடர் விருது: எங்களின் திறணாய்வுக் குழு இது வரை 30 கவிஞர்களுக்கு மேல் படைப்பின் பெருமைமிக்க கவிச்சுடர் விருது அளித்து கௌரவித்திருக்கிறது. முறையாக படைப்பாளிகளின் படைப்புகளை பலகட்டங்களாக ஆய்வுசெய்து அளிக்கும் ஒரு உயரிய விருது. உங்களின் அங்கீகாரம் இதுவெனில் நாங்கள் உங்களுடன்.

படைப்பு மேடை: நுண் கலை, கிராமியக் கலை, குறும்படம், நேர்காணல், இசை, இயல், நாட்டியம், சிறப்புத் திறமை போன்ற பல்வகைக் கலாச்சார வெளிப்பாட்டிற்கான தனி மேடை இது. இது வெறும் கனவு மேடையல்ல உங்கள் கனவுக்கான மேடை.

படைப்பு பதிப்பகம்: தங்களின் எழுத்துக்களும் புத்தகவடிவில் வராதா என்று ஏங்கும் படைப்பாளிகளை ஊக்குவித்து அவர்களின் கனவினை உடன் இருந்து நனவாக்கிக் கொடுக்கும் படைப்பின் தனிப் பதிப்பகம். சாமானியர்களின் எழுத்து சித்திரம்...நாளைய படைப்பின் சரித்திரம்.

படைப்பு-குறளும் குரலும்: தினம் ஒரு திருக்குறள் என குறளுடன் தெளிவுரையும் வழங்கி யுடுயூபில் வலையேற்றம் செய்து மூன்று தேர்வாளர்களை கேள்விகள் மூலம் தேர்ந்தெடுக்கும் காணொளி பிரிவு. தினம் ஒரு குறள் . மனம் பெறும் அருள்.

படைப்பு ஒலியும் ஒளியும்: தேர்ந்தெடுக்கப் பெற்ற சிறந்த கவிதைகளின் காணொளி. படைப்பு குழுமத்தில் பதியப்பட்ட கவிதைகளை விமர்சனத்துடன் ஒளி ஒலி வடிவில் படைப்பு குழுமத்தின் யூடுயூப் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிளமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்ப படுகிறது. ஒலியும் ஒளியும்... கவிதைத் துளியும்.

படைப்பு போட்டிகள்: ஒரு சவாலாக எடுத்து அனைவரையும் எழுதத் தூண்டும் படைப்பின் போட்டித் தளம். இது வரை 7 க்கு மேல் போட்டிகள் அறிவித்து வெற்றியாளர்களை வருடாந்திர மேடையில் லட்ச ரூபாய்க்கு மேல் பணமாக பரிசளித்து கௌரவப்படுத்தியிருக்கிறது.

படைப்பு FM வானொலி: காஃபி வித் கவிதை என்ற பிரிவின் கீழ் சிறந்த நூலைப்பற்றி விமர்சனத்தை பின்னணி இசைக்கோர்ப்புடன் ஒலி வடிவில் படைப்பு குழுமத்தின் யூடுயூப் பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்ப படுகிறது. காஃபியை போன்றே கவிதையும் சுவையானது.

படைப்பு அறக்கட்டளை: நன் கொடையாளர்களுக்கும் நலிந்தவர்களுக்குமான இணைப்பு பாலம் இது. இல்லாமையை இல்லாமல் ஆக்கும் சிறு முயற்சி. நலிந்தவர்களை வளர்ப்போம், அவர்களுடன் வளர்வோம்.

அனைத்தும் உங்களின் உற்சாக பங்கேற்புடனும் அன்பான ஆதரவுடனும். உங்கள் கைதட்டலின் ஒலி எங்களின் இதயத் துடிப்பின் ஒலி. நமக்கான காலங்களும் பாதைகளும் நம் ஒவ்வொருவரின் கண் முன்னே. இணைந்தே பயணிப்போம்.

வளர்வோம் வளர்ப்போம்.

under construction

MAGAZINE PART READY FOR YOUR VIEW...