வணக்கம். படைப்பு ‘தகவு’ எழுபத்தொன்பதாவது
இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
கவிஞர் மனுஷியுடனான நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. கவிதைக்குள் கலந்திருக்கும் கதை பகுதியில் கவிஞர் வெண்ணிலா குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக சினிமா பகுதியில் ‘தி குட் தி பேட் அண்ட் தி அக்லி’ திரைப்படம் அலசப்பட்டுள்ளது. கவிஞர் விக்ரமாதித்யனுக்கு
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கவிஞர் மீரா எழுதியுள்ள கடிதங்கள் இதழில் இடம்பெற்றுள்ளன. வானவில் வண்ண மின்னல் பகுதி ‘வெற்றி’ என்பதன் கருத்தாக்கம் குறித்த
ஆய்வாக அமைந்துள்ளது. மழைக்கஞ்சி கட்டுரை தமிழர்களின்
பண்பாட்டுக் கூறினை விளக்கி எழுதப்பட்டுள்ளது. தமிழ் நிலத்து வீரமங்கையரில்
குயிலி பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.