காகிதத்தின் மூன்றாம் பக்கம்
நூல் பெயர் : காகிதத்தின் மூன்றாம் பக்கம்
(கவிதை )
ஆசிரியர் : மதுசூதன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 92
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடேட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 100
இவ்வுலகம் எப்போதுமே நிம்மதியால் நிறைந்திருக்கும், மனிதன் இயற்கையைச் சீண்டாதவரை. இயற்கையும் பால்யமும் ஒன்றே. அதனால்தான் பால்யங்களில் அவ்வளவு புன்னகைகளையும் ஆனந்தத்தையும் நம்மால் கட்டவிழ்க்க முடிகிறது. பால்யத்தின் நாட்களில் நாம் கற்ற, கேட்ட, பார்த்த ஒவ்வொன்றும் அவரவர் அனுபவத்திற்கேற்றது போல முதிர்ச்சி ஆக ஆக அது ஞானத்தின் ஊற்றாகக் கூட மாறி விடலாம் என்பதே அதன் மகிமை. ஓர் உயிரென்றால் காகிதத்தின் இரு பக்கங்களைப் போல பிறப்பும் இறப்பும் இருக்கும் அதுவே வாழ்வென்றால் அது காகிதத்தின் மூன்றாம் பக்கமாக இருக்கும். அப்படிப்பட்ட வாழ்வின் ரசித்த தருணங்களை எல்லாம் சிறு குறு கவிதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'காகிதத்தின் மூன்றாம் பக்கம்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் எல்லோருக்கும் புரியும் வகையில் மிக எளிய நடையில் இருப்பதும் அது பால்யத்தின் நினைவுகளை வாசிப்பவர் மனதில் விதைத்து விட்டுப் போவதும் இத்தொகுப்பின் பலம்.
சேலத்தைப் பிறப்பிடமாகவும், பெங்களூரை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி மதுசூதன் அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இவரது முதல் கவிதைத் தொகுப்பான 'பொய் மசியின் மிச்சம்' படைப்பு பதிப்பகம் மூலமே வெளிவந்து பலரது கவனம் பெற்றது. இணையத்தில் படைப்பு உட்பட பல தளங்களிலும் இவர் கவிதைகள் தேர்வு செய்யப்படு பதிவாகிக் கொண்டிருக்கின்றன. படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் ‘மாதாந்திர சிறந்த படைப்பாளி’ என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், ‘கவிச்சுடர்’ எனும் உயரிய விருதையும் பெற்றவர் மேலும் படைப்பு பரிசுப்போட்டிகளில் கவிஞர்கள் வண்ணதாசன் மற்றும் யவனிகா ஸ்ரீராம் அவர்களால் தேர்வு செய்யப் பட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.