நூல் பெயர் : சைகைக் கூத்தன்
(கவிதை)
ஆசிரியர் : முகமது பாட்சா
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 120
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ஓவியர் ரவிபேலட்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
வார்த்தைகளின்வழியே வரும் செய்தியை செவிகள் ஏற்றுக்கொண்டாலும் அல்லது கண்கள் ஏந்திக்கொண்டாலும் அதை காட்சிகளாக மாற்றி சேமித்து வைத்துக்கொள்ளும் வல்லமை மனதிற்கு உண்டு. அவ்வாறு ஆழ்மனதில் சேமிக்கப்பட்ட அந்தக் காட்சிகள் நிஜமாகவோ, கற்பனையாகவோ, எதுவாக இருந்தாலும் அதை அப்படியே வைத்திருப்பவருக்கு பாரமாகிறது. மூளைக்குள் செலுத்தி அசை போடுபவருக்கு ஞானமாகிறது. அப்படிப்பட்ட ஞானத்துளிகளின் காட்சிப் படிமங்களை எல்லாம் கவிதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘சைகைக் கூத்தன்’ தொகுப்பு. வரிகளில் மிளிரும் வாழ்வியலும் தத்துவப் புனைவுகளும் குறியீடுகளால் குறிப்பிடும் விவரிப்புகளும் வசிப்போரை வசியம் செய்ததுபோல வசீகரித்துவிடும், இந்நூல்.
காரைக்காலை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி முகமது பாட்சா அவர்களுக்கு இது, இரண்டாம் தொகுப்பு. தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன், படைப்பு பதிப்பகம்மூலம் வெளியிடப்பட்ட இவரது முதல் தொகுப்பான ‘ஆரிகாமி வனம்’ பலரது பாராட்டுகளுடன் இன்றுவரை கவனம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இன்றைய இலக்கிய உலகிலும் சமூக வலைதளத்திலும் பிரபல பத்திரிகைகளிலும் தன் படைப்புகள்மூலம் நன்கு அறியப்பட்டவர். நவீனத்தை எழுத்துகளில் புகுத்தி, சமூகத்தை படைப்புகளில் கையாளும் படைப்பாளிகளில் கவனிக்கப்படும் படைப்பாளி இவர். படைப்புக் குழுமத்தின் பரிசுப்போட்டிகளில் கவிஞர் யூமா வாசுகி, கவிஞர் மேத்தா மற்றும் எழுத்தாளர் பவா செல்லதுரை அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர். மேலும் மாதாந்திர பரிசு மற்றும் கவிச்சுடர் எனும் படைப்பின் உயரிய விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.