logo

ரகசியங்களின் புகைப்படம்


நூல் பெயர்    :  ரகசியங்களின் புகைப்படம்
                      (கவிதைகள் )

ஆசிரியர்    :  மா.காளிதாஸ்  

பதிப்பு            :  முதற்பதிப்பு - 2021

பக்கங்கள்    :  112

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்    :  படைப்பு வடிவமைப்புக் குழு 

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு பிரைவேட் லிமிடேட், சென்னை
  
வெளியீடு            :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ 100
உள்ளதை உள்ளபடி சொல்வது புகைப்படம். எப்போதும் யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருப்பது ரகசியம். சாட்சியாக இருப்பது புகைப்படம் ஆனால் எந்தச் சாட்சியமும் இருப்பதில்லை ரகசியத்திடம். இப்படி எதிரெதிர்த் திசையில் இருக்கும் இருவேறு துருவங்களை ஒரே நேர்க்கோட்டில் காந்தமாக இணைக்கும் வல்லமை எதார்த்தமான எழுத்திற்கு உண்டு. பிறப்பு, இறப்பு எனும் இருவேறு துருவங்களை ஒன்றாக இணைக்கும் வாழ்வின் எதார்த்தமே எழுத்துக்கான முதல் எடுத்துக்காட்டு. அவ்வாறான வாழ்வின் எதார்த்தங்களை எல்லாம் ஒன்று திரட்டி உருவாக்கப் பட்டிருப்பதே 'ரகசியங்களின் புகைப்படம்' எனும் இத் தொகுப்பு. நவீனமாக  இருப்பதும் அதை ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தி சொல்லி இருப்பதும், மௌனங்களை உடைக்கும் வாழ்வியலின் ரகசியத்தை வரிகளின் வழியே புகைப்படம் எடுத்து புரிய வைப்பதுபோல  எழுதி இருப்பதும் இந்நூலின் பலம்.

தென்காசி மாவட்டம் சிவகிரியை அடுத்த ராயகிரியைப் பிறப்பிடமாகவும், மதுரையை வசிப்பிடமாகவும் கொண்ட வணிகவியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியரான படைப்பாளி மா.காளிதாஸ் அவர்களுக்கு இது ஆறாம் தொகுப்பு. இவரது ஐந்தாம் கவிதைத் தொகுப்பான 'பெருஞ்சொல்லின் குடல்' படைப்பு பதிப்பகம் மூலமே வெளிவந்து பலரது கவனம் பெற்றது. இணையத்தில் படைப்பு உட்பட பல தளங்களிலும் இவர் கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு பதிவாகிக் கொண்டிருக்கிறது. சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் இன்றும் எழுதி வருகிறார். செல்வன் கார்க்கி  நினைவுப் பரிசு (த.மு.எ.க.ச) உட்பட பல விருதுகள் பெற்றிருப்பதுடன் படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.