யாவுமே உன் சாயல்
காயத்ரி ராஜசேகர்
கவிதைகளைப் பதியமிட மழைக்காலத்தைப் போலொரு உகந்த நாட்கள் இல்லை எனச் சொல்லி விடலாம். மழைக்காலத்தின் துவங்கு நாட்களில் ஒரு வண்டல் நிலத்திலிருந்து ஒரு ரம்மிய மணம் சூழ்ந்தெழும்புவதைக் கவனிக்கத் தவறியவர்களுக்கும், காணக் கிடைத்திடாதவர்களுக்கும் படைப்புக் குழுமம் வெளியிடும் இந்த "யாவுமே உன் சாயல்" அவ்வுணர்வைத் தருவிக்கும் என்பது திண்ணம். ஒரு சராசரி மனிதனானவன் தன் வாழ்வுக்காலங்களை புகைப்படமெடுத்து தன் உற்றார்களோடு தன் அந்திமக் காலங்களில் இருந்து ரசிப்பது எவ்வளவு அலாதியானது என்பதை உணர்ந்திருப்பீர்களேயானால் இப்புத்தகம் உங்கள் வாசிப்பு அலமாரியில் நிரந்தரமான ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்ளும். ஒவ்வொரு கவிதைகளையும் தன் பிரதியாகவே, பிம்பமாகவே வாசகர்கள் அனுபவிக்கலாம் என்பதை போல அமைந்து விட்டது இத்தொகுப்பின் பலம்.
தஞ்சையை பிறப்பிடமாகவும் சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி காயத்ரி ராஜசேகர் அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இவர் சமூக வலைதளங்களிலும் வார இதழ்களிலும் தன் எதார்த்தக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். இவர் கவிதைக்கு சான்றாக படைப்புக் குழுமத்தின் மாதாந்திர பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நூல்
ஆரிகாமி வனம்
நூலாசிரியர்
முகமது பாட்சா
நூல் வகைமை
கவிதை
நூல் விலை
100
வெளியீடு
படைப்பு பதிப்பகம்
அட்டைப்படம்
கமல் காளிதாஸ்