logo

விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள்


நூல் பெயர்    :  விண்ணைச் சூடியாடும் இரு நீலவளையங்கள்
                      (கவிதை )

ஆசிரியர்    :  கார்த்திக் திலகன்  

பதிப்பு            :  முதற்பதிப்பு - 2021

பக்கங்கள்    :  146

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்    :  ரவி பேலட்  

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
  
வெளியீடு            :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ 120
மரபான இலக்கியத்துக்குக் காதுகளே பிரதான கருவிகள். நவீன இலக்கியத்துக்கோ மனிதனின் கண்களே பிரதான கருவிகள். நவீன இலக்கியப் படைப்புகளின் தனித்துவமான அம்சங்களான விரிவும், பொருள்மயக்கமும், வாசகப் பங்கேற்பும், துண்டாடப்பட்ட கதைசொல்லல், படிமங்கள், குறியீடுகள் இவை யாவும் மனிதனின் கண்கள் வழியாகவே அவை அவனது சிந்தைக்குள் செல்லும். நவீன கவிதை என்பது  மீமொழியின் சொற்களால் இயங்கும். மீமொழி என்பது மொழிக்குள் புழங்கும் நுண்மையான இன்னொரு மொழி. நமக்குத் தெரிந்த ஒரு வார்த்தைக்கு அதன் இயல்பான பொருளையும் தாண்டி இன்னொரு பொருளை ஏற்றுதல் எனச் சொல்லலாம். மனிதனின் செல்திசை,  வாழ்வியல், இருத்தலியல் போன்று தான் சார்ந்த குறுகிய நிலப்பரப்பைத் தாண்டி உலகின் எல்லையை நோக்கி விரியும் பார்வையை நவீன இலக்கிய வரிகளின் வழி முன்வைக்கும் நூலே ‘விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள்’. செவ்வியல், அழகியல், நிகழ்வியல், கற்பனாவாதம், நவீத்துவம், பின்நவீனத்துவம், மீபொருண்மைவாதம், மாய யதார்த்தவாதம், சர்ரியலிசம் என எல்லாவற்றையும் அணிகலன் என சூடிக் கொண்டிருப்பது இந்நூலின் பலம்.

கடலூரை  வசிப்பிடமாகக் கொண்ட படைப்பாளி கார்த்திக் திலகன் அவர்களுக்கு இது மூன்றாம் தொகுப்பு. இவரது இரண்டாம் கவிதைத் தொகுப்பான ‘அந்த வட்டத்தை யாராவது சமாதனப்படுத்துங்கள்’ நூல் 2019 ஆண்டுக்கான படைப்பின் இலக்கிய விருதை பெற்றுள்ளது. இன்றைய இணைய ஊடங்களில் தனது இலக்கிய பங்களிப்பால் நன்கு அறியப்பட்டவர். படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த  படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், கவிச்சுடர் எனும் உயரிய விருதையும் பெற்றவர் மேலும் படைப்பு பரிசுப்போட்டியில் கவிஞர் வண்ணதாசன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.