நூல் பெயர் : யானையின் தும்பிக்கையும் புத்தரின் கரமும் (கவிதைகள்)
ஆசிரியர் :
ரகுநாத் வ
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
144
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 200
நாற்பதாயிரம்
தசைகளைக் கொண்டுள்ள யானையின் தும்பிக்கை என்பது தசைப் பொறியியலின் அற்புதம். மனித நாக்கைப் போலவே, இதற்கும் எலும்புகள் இல்லாவிட்டாலும்
முப்பதாயிரம் கிலோ வரை எடையைத் தூக்கும் வலிமையே தும்பிக்கையின் நம்பிக்கை. பத்தொன்பது
கிலோமீட்டர் தொலைவில் உள்ள தண்ணீரை உணரும் திறன் தும்பிக்கைக்கு உண்டு என்பது வியப்பின்
உச்சம். வனங்களின் அதிசயம் யானை என்றால், ஆசையைத்துற என்ற புத்தர் குணங்களின் அதிசயம்.
மொழியின் அதிசயம் இலக்கியமென்றால் புத்தரின் தத்துவங்கள் பொன்மொழிகளின் அதிசயம். இந்த
இரு அதிசயங்களின் பெயர்களை தலைப்பென்று நூலுக்கு வெளியே வைத்தும், இந்த இரு அதிசயங்களின்
அடையாளமான இயற்கையையும் தத்துவங்களையும் ஹைக்கூவாக நூலுக்கு உள்ளே வைத்தும் உருவாக்கப்பட்டிருப்பதே
‘யானையின் தும்பிக்கையும் புத்தரின் கரமும்’ நூல்.
மதுரையைப்
பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி
ரகுநாத்.வ அவர்களுக்கு இது நான்காவது நூல். பல்வேறு வார இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களில்
இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. இவர், ‘பாரதி நூற்றாண்டு நினைவு’ விருது உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருப்பதுடன், படைப்புக்குழுமத்தால்
வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரத்தையும், படைப்புக் குழுமத்தின்
உயரிய விருதான கவிச்சுடர் விருதையும் பெற்றுள்ளார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.