நூல் பெயர் : பெருஞ்சொல்லின் குடல்
(கவிதைகள்)
ஆசிரியர் : மா.காளிதாஸ்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 112
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ஓவியர் ரவி பேலட்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
சொற்கள் எப்போதும் அமைதியாகவே இருக்கின்றன. அமைதியே அதன் பெரிய பலம். அவை பேசுவதுமில்லை; நாம் பேசும்போது அவை உருவாவதுமில்லை. மாறாக எழுதும்போது மட்டுமே அச்சொற்கள் பேசத் தொடங்குகின்றன. அப்படி பேசத் தொடங்கிய பின்பும் வெளியே வரமுடியாமல் விழுங்கப்பட்டு, சிறுகுடலுக்கும் பெருங்குடலுக்கும் இடையில் செரிமானமாகாமல் சிக்கித் தவிக்கும் சமூகச் சொற்களை ஒன்று திரட்டி தொகுக்கப் பட்டிருப்பதே “பெருஞ்சொல்லின் குடல்” எனும் இத் தொகுப்பு. நவீனமாக இருப்பதும் அதைப் புரியும் வகையில் எதார்த்தமாகச் சொல்லி இருப்பதும், சொற்களின் எழுச்சியே எழுத்தின் புரட்சி என்பதை நிலைநாட்டி இருப்பதும் இந்நூலின் பலம்.
தென்காசி மாவட்டம் சிவகிரியை அடுத்த ராயகிரியைப் பிறப்பிடமாகவும், மதுரையை வசிப்பிடமாகவும் கொண்ட, வணிகவியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியரான படைப்பாளி மா.காளிதாஸ் அவர்களுக்கு இது ஐந்தாவது தொகுப்பு. சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் இன்றும் எழுதி வருகிறார். செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு (த.மு.எ.க.ச) உட்பட பல விருதுகள் பெற்றிருப்பதுடன் படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.