நூல் பெயர் : அவன் - அவள் (சிறுகதைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
168
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 230
இன்றைய படைப்பிலக்கியங்களின் கதைக்கரு மனித வாழ்விலிருந்தே உருவாகிறது. இவ்வகையில்
மனிதர்களின் அனுபவங்களும், எண்ணங்களும் சிறப்பாக - சுதந்திரமாக - வெளிப்படும் பொழுது
படைப்பிலக்கியங்கள் தோன்றுகின்றன. இவ்விலக்கியங்கள் கவிதை, கதை, சிறுகதை, நாவல், நாடகம்
என்று பல்வேறு வடிவங்களைக் கொண்டு விரிவு பெறுகின்றன. இலக்கியத்தின் சுருங்கிய வடிவம்
கவிதை இருப்பதைப் போல, இதிகாசங்களின் வரலாறுகளின் கதைகளின் சுருங்கிய வடிவம் சிறுகதையாகிறது
அதிலும் எல்லோருக்கும் புரியும் வகையிலான எளிய வடிவத்தில் இச்சிறுகதைகள் இருப்பது கூடுதல்
சிறப்பு. ஆகவே சிறுகதை மனித வாழ்க்கையோடு மிக நெருங்கி இருக்கும் இலக்கிய வகையாகிவிட்டது.
அப்படிப்பட்ட மனித வாழ்வியலின் உணர்வுகளை எல்லாம் கதைகளாக்கி உருவாக்கப்பட்டிருப்பதே
‘அவன் அவள்’ எனும் நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி
விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நம் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியிடும் ஐந்தாவது நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’,
‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர்
விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.