நூல் பெயர் : குருவிக்காக ஆடும் இலைகள்
(கவிதை)
ஆசிரியர் : கோபிநாதன் பச்சையப்பன்
பதிப்பு : முதற்பதிப்பு 2021
பக்கங்கள் : 118
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கியப் படைப்புக் குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடேட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
இன்றைய இயந்திர உலகில் எவ்வளவு சுருங்கச் சொல்ல முடியுமோ அவ்வளவு எளிதாக எல்லோரிடமும் சென்று அடையும் என்பதே உண்மை. அது இன்றைய இலக்கிய உலகிற்கும் பொருந்தும் என்பதே எதார்த்தம். இப்போது சாமானியர்களுக்கும் புரியும் வகையில் குறுங்கவிதைகள் பலரும் பரவலாக எழுதி வருகிறார்கள். ஆதி மொழியான தமிழில் ஐங்குறுநூறு இலக்கியமே இவ்வகையான குறுங்கவிதைக்கு சான்று இருப்பினும் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் இந்தத் தலைமுறை படைப்பாளிகளை ஆக்கிரமித்து இருக்கிறது காரணம் அதன் தன்மையும் எளிமையும். அப்படிப்பட்ட தன்மை வாய்ந்த துளிப்பாக்களை எல்லாம் இக்காலச் சிந்தனைக்கு ஏற்றது போல உருமாற்றி உருவாக்கப்பட்டிருப்பதே 'குருவிக்காக ஆடும் இலைகள்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு குறுங்கவிதையும் எல்லோருக்கும் புரியும் வகையில் மிக எளிய நடையில் இருப்பதும் அது துளித்துளியாக விழுந்து வாசிப்பவர் மனதில் மழையாகி விட்டுப் போவதே இத்தொகுப்பின் பலம்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் எனும் ஊரைப் பிறப்பிடமாகவும், கத்தார் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி 'கோபிநாதன் பச்சையப்பன்' அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. கத்தார் நாட்டில் வழங்கப்படும் 'தமிழ் மகன் விருது' என்ற தனித்துவமான விருதையும், உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா வழங்கிய 'The Enlightenment Award', எனும் விருதைப் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது