நூல் பெயர் : கானங்களின் மென்சிறை
(கவிதை )
ஆசிரியர் : ந.சிவநேசன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 126
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 120
மொழியை எவ்வாறு இசையாக்குவதென்று, இசையை மொழியாகக் கொண்ட பறவைகளிடமிருந்து மனிதன் கற்றுக் கொண்டான். இசையென்பது இசைய வைப்பது. மனதை இசைய வைப்பதில் இசையே முதன்மை வகிக்கிறது. மயக்கத்தை வெளியே தராமல் உணர்வின் உள்ளே தரும் வல்லமை கொண்டுள்ள இசை, நம்மை நமக்குள்ளே சிறைப்பிடிக்கும் பேராற்றலும் பெற்றிருக்கிறது. ஆதியில் வாழ்ந்த நம் பூர்வக்குடி கவிஞர்களும் இலக்கியங்களை இசைவடிவிலேயே இயற்றினார்கள். இசைக்கும், தமிழுக்கும் உறவு ஒன்று இருந்ததாலேயே இசைத்தமிழ் என்றானது. இசையில் எத்தனையோ உத்திமுறைகளிருப்பினும் கவிதைகளை கானங்களாக மாற்றுவதில் ஒரு தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட தனித்துவ வரிகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘கானங்களின் மென்சிறை’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் உள்ளுணர்வுக்குள் ஊடுருவி இசையின் நினைவலைகளைப் போல நகர்த்திச் செல்லும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ள ஆரியபாளையம் சிற்றூரைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி சிவநேசன் அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இவர் சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகை உலகில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். தொடக்கப்பள்ளி ஆசிரியரான இவரது ‘விருட்சங்களின் ஆதிவேர்’ எனும் சிறுகதை கலைமாமணி அய்க்கண் நினைவுச் சிறுகதைப் போட்டி- 2020 இல் மூன்றாம் பரிசும், 2021 இல் மதுரை திருநங்கையர் ஆவண மையம் நடத்திய சு.சமுத்திரம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் ‘எமிலியின் முத்தங்கள்’ எனும் சிறுகதை சிறப்பு பரிசும் வென்றுள்ளது. மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது