நூல் பெயர் : தற்காலச் சிறந்த கவிதைகள் (கட்டுரைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
இரண்டாம் பதிப்பு - 2024
பக்கங்கள் :
124
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 170
கொண்டாட்டம் என்பது தனக்கானது. கொண்டாடுதல் என்பது பிறர்க்கானது. ஆனால் இலக்கியத்தில்
மட்டும்தான் கொண்டாடுதலே கொண்டாட்டமாகி விடுகிறது. ஒரு எழுத்தாளனை ஒரு வாசகன் கொண்டாடும்போது
விழிகளாக விரிவடைகிறது அதுவே ஒரு எழுத்தாளனை சக எழுத்தாளனே கொண்டாடும்போது விழாவாகிவிடுகிறது.
அப்படி கொண்டாடப்பட வேண்டிய கொண்டாடப்பட்ட கவிதைகளைப் பட்டியலிட்டு அக்கவிஞர்களை மதிப்புரைகளால்
கொண்டாடி இருப்பதே ‘தற்கால சிறந்த கவிதைகள்’ எனும் நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி
விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நம் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியிடும் ஏழாவது நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’,
‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர்
விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.