நூல் பெயர் : நான் உன்னுடைய துறவி
(கவிதை)
ஆசிரியர் : தி.கலையரசி
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 116
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
துறவியின் முதிர்ச்சி யோகியாகவும், யோகியின் முதிர்ச்சி ஞானியாகவும், ஞானியின் முதிர்ச்சி சித்தனாகவும், சித்தனின் முதிர்ச்சி முனிவராகவும், முனிவனின் முதிர்ச்சி இறைநிலையாகவும் கொண்ட பல அடுக்குகளை உள்ளடக்கியது, ஆன்மாவின் தரிசனம். எதற்கும் ஆசைப்படாமல் இருப்பவரும் ஒருவகையான துறவி எனில், கருணையும் அன்பும் ததும்பும் உள்ளம் உண்டாக ஆசைப்படுபவரும் ஒருவகையான துறவிதான். அன்பை நேசிக்கவும், பண்பை வாசிக்கவும், கருணையைப் பூசிக்கவும் பழக்கிய சொற்கள், ஆன்ம ஞானத்தை ஆராதிக்கத் தொடங்கும். அப்படிப்பட்ட நேசிப்பின் சொற்களை ஒன்று திரட்டி வாசிக்கக் கிடைக்கும் வரிகளாக உருவாக்கப்பட்டிருப்பதே ‘நான் உன்னுடைய துறவி’ எனும் தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும், வாசிப்பவர்களின் சிந்தனைக்கேற்ப மனதிற்குள் வெவ்வேறான காட்சித்துளிகளாக துளிர்விடத் தொடங்கும் சிறப்பே இத்தொகுப்பின் பலம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட பல் மருத்துவரான படைப்பாளி தி.கலையரசி அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இவர், இன்றைய இலக்கிய உலகிலும், பல பத்திரிகை இதழ்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.