நூல் பெயர் : சாயல் எனப்படுவது யாதெனின்
நூல் வகைமை : கவிதைகள்
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2025
பக்கங்கள் :
146
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 200
மற்றவர்களின்
கருத்துக்களையும், அடையாளங்களையும் நமக்குள் சுமக்காமல் நமக்குள் நாம் மட்டும் வாழ்வதே
சுயம். யாரொருவர் எந்தவொரு நினைவுக்கு சக்தி கொடுக்கிறாரோ அந்த நினைவே அவரது சுயம்
ஆகிறது. அடிப்படையில் சுயம் என்பது மனிதநேயம்தான். ஒருவரின் சுயம் நல்ல விளைவுகளையும்
கொடுக்கலாம், கெட்ட விளைவுகளையும் கொடுக்கலாம். சுயமாக சிந்திக்கும்போதும், மனிதநேயத்துடன்
இருக்கும்போதும் நல்ல விளைவுகளையும், சுயநலமாக சிந்திக்கும்போதும், மனித நேயமற்று இருக்கும்போதும்
கெட்ட விளைவுகளையும் கொடுக்கும். நாம் நமது சுயத்தையும் சுயநலத்தையும் அறிய வேண்டுமானால்,
நம்மை நாமே ஆராய வேண்டும். நம்மை நாமே ஆராய்ந்து பெறும் தேடலில் தெளிவு கிடைக்கும்.
அந்தத் தெளிவில் அமைதி கிடைக்கும். அந்த அமைதியே ஞானத்தைக் கொடுக்கும். அந்த ஞானத்தில் பிறக்கும் சொற்களானது அழியா இலக்கியத்தைப்
படைக்கும். அப்படிபட்ட சுயம் சார்ந்த ஞானத்தை எழுத்தில் கொண்டுவந்து கவிதைகளாக உருவாக்கி
இருப்பதே ‘சாயல் எனப்படுவது யாதெனின்...’ எனும் இந்நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி
விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஏற்கனவே பதிப்பித்த இவரின் கவிதைத் தொகுப்பான இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம்
மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின்
‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’,
2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும்
2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.