logo

பறவையிடம் இருக்கிறது வீடு


நூல்                            : பறவையிடம் இருக்கிறது வீடு

நூல்  வகைமை          :  கவிதைகள்

ஆசிரியர்                    : பாலை நிலவன்

பதிப்பு                          :  முதற்பதிப்பு - 2023

பக்கங்கள்                  :  78

வெளியீட்டகம்          :  இலக்கிய படைப்பு குழுமம்

வெளியீடு                  :  படைப்பு பதிப்பகம்

விலை                         :  ரூ. 140

தொன்னூறுகளில் எழுதத் தொடங்கிய பாலை நிலவனின் கவிதை உலகம் நுட்பமும் ஆழமும் கூடியது. ஒளிந்து கொண்டிருப்பவனின் தன்னந்தனியனின் சிதிலமடைந்தவனின் குரலாகவே வெளிப்படுகின்றன வாழ்க்கை குறித்தான நம்பிக்கையின் கீற்றுகள் குழந்தைகள் பறவைகளிடம் மட்டுமே  துளிர் விடுகின்றன. அவற்றிடமே சுதந்திரத்தையும் ஒளியையும் அவரால் காண முடிகிறது.

தொன்மமும் நவீனமும் ஆன தனித்துவ மாய ரூப கவிமொழி இவருக்கு வெகு இயல்பாக கைகூடியுள்ளது. அது தாய்மையின் கனிவாகவும் சில போது பெருவழியின் விமல் ஆகவும் கவிதைகளில் வெளிப்படுகிறது. ஒரு கவி தனது ஆன்மாவை பிளந்து காட்டும் போது அங்கேயும் பறவைகளின் பாட்டொலியும் குழந்தைகளின் ஆர்ப்பரிப்பையுமே நம்மால் தரிசிக்க முடிகிறது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.