நூல் பெயர் :
வீடு திரும்புதல் (கவிதைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
இரண்டாம் பதிப்பு - 2024
பக்கங்கள் :
94
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 130
நாம் கவிதைகளை படித்து அதை முழுமையாக உள்வாங்கும் தருணத்தில், மகிழ்ச்சியற்ற
நிலையில் இருந்து விடுபடத் தொடங்குவோம். வேறு எந்தப் பிரச்சனையில் தவித்தாலும், அது
சுய அறியாமையால்தான் நிகழ்ந்தது. ஆகவே தானகவே கரைந்து விடும் எனப் புரியத்தொடங்கும்.
மனம் சமநிலை அடையும்; சிந்தனை விசாலமடையும்; எல்லாவற்றையும் பகுப்பாய்ந்து பார்க்கும்
பக்குவம் வளரும்; எல்லோரையும் போலல்லாமல் தனித்துவம் பெருகும்; நிதானம் பிறக்கும்;
நம்பிக்கை முளைத்து மூட நம்பிக்கை இறக்கும்; ஐம்புலன்கள் திறக்கும்; வாழ்வு சிறக்கும்.
உடல், மனம், உணர்வுகள் மற்றும் சக்தி நிலைகளை ஒரு குறிப்பிட்ட முதிர்ச்சிநிலைக்கு எடுத்துச்
செல்லும். நமக்குள் நாமே ஒளிந்து கொண்டிருக்கிறோம் என்ற எதார்த்தத்தை வெளியே சொல்லும்.
ஒன்றைவிட மற்றொன்று சிறந்தது என்ற பாரபட்சமில்லாமல் இருந்தாலே போதும், நமக்குள் கவிதை
மனம் வந்துவிட்டதென பொருள். இப்படிபட்ட இயற்கையான எதார்த்தங்களை எழுத்தில் கொண்டுவந்து
கவிதைகளாக உருவாக்கி இருப்பதே ‘வீடு திரும்புதல்’ எனும் இந்நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஏற்கனவே பதிப்பித்த இவரின் முதல் கவிதைத் தொகுப்பான இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.