நூல் : மனம் பிசகிய நிறம்
நூல் வகைமை :
கவிதைகள்
ஆசிரியர் :
பாலை நிலவன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 112
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 188
தொன்னூறுகளிலிருந்து பிறழ்ந்த மொழியினூடாக கவிதைகள் எழுதும்
பாலை நிலவனின் ஆறாவது கவிதை "மனம் பிசகிய
நிறம்". தனிமையும் துன்பமும் மனவலியும் கொண்ட பிரபஞ்ச மனிதன் ஒருவனின் நெருக்கடிகளினூடாக மனம் பிசகிய மொழி கட்டுகளைக் கடந்து புதிய சிதைவின்
அழகியலை கண்டடைந்துள்ளது. நாமறிந்த ஜீவராசிகளும்
சிருஷ்டி ஆக்கத்தில் மாய ரூபங்கொள்கின்றன.
அசந்த நமது வாழ் இடங்களை தீர்க்கமான ஆகக் கண்களின் மூடாக
அறிய விளையும் போது அவை மனம் குழம்பிய நிறக்கோர்வைகளின் சிதிலமாக வரையப்பட்டுள்ளன.
அந்நியமான மனிதனை பரிதவிக்கும் இயற்கையுடன் இணைக்கும் கவிதை
மொழியுடன் இத்தொகுப்பு வெளியாகிறது. தமிழ் கவிதைகள் இன்றடைந்துள்ள மேன்மையான இடத்தை
மறுபடியும் உலகளாவிய தளத்தில் ஸ்தாபிதமாக்குகிறது இக்கவிதை தொகுதி.