நூல் : பசியை ரத்தத்தால் தொடுவது
நூல் வகைமை :
கவிதைகள்
ஆசிரியர் :
பாலை நிலவன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 142
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 249
துவக்கத்தில் பால்ய சகியாக வரும் ஒரு சிறுமி தேவதையாக, பைபிள்
வசனங்களை உண்டு வாழ, பின் துணி பூக்களை பின்னும்
கிருஷ்ணவேணியாக உருமாறுகிறாள். இக்கவிதைகளுக்குள்
கண்ணுக்குத் தெரியாத கத்திகள் அந்தரத்தில் மிதக்க பாலையின் அலைச்சலின் தனிமையின் கண்கள்
இறந்தவனின் இருளிலிருந்து புதிய வெளிச்சத்தை புடமிட்டுள்ளது. "இரயிலில் இறங்கிய
பறவை" போன்று கவிதைகளில் மையல், உடல், தாபம் போன்ற படிநிலை உடலியல் செயல்பாடுகள்
வினோதம் கலந்து பாலைவன திருடர்களின் மணல் இசைக்கும் தனிமைகள் மாந்திரீகமாக நிகழ்கின்றது.
பெருநகர தெருக்களில் ஐஸ்விற்கும் கடவுளையும் ஐஸ் பெட்டியில்
ஜில்லிட்டு தூங்கும் மரணித்த கலை போத உடல்களையும் தன் கவிதைக்குள் கொண்டு வந்துள்ளான்
பாலை. "மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறு தடையும் -" கவிதையில் ராஜ நாகத்தின்
நளின நடமாட்டத்தை அதன் வாசனைப் பாதையில் வளைந்து செல்லும் கவிதையாக உலக விட வைத்துள்ளான்
பாலை தன் நிலவெளியில்.