நூல் பெயர் : ஊருங்காலம் (கவிதைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
இரண்டாம் பதிப்பு - 2024
பக்கங்கள் :
94
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை : ரூ 130
மனிதர்களுக்கு
கண்ணீர்த்துளி என்பது, ஒரு சொட்டு நீரும், சில உப்பும் என்றுதான் தெரியும். அந்தக்
கண்ணீரின் ரகசியத்தை, அதன் சரித்திரத்தை அவர்களால் அறிய முடியுமா? அது கவிஞர்களால்தான்
அறிய முடியும். கவிஞன் பக்தனாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், கவிஞன் பக்தனாக இல்லாமலிருப்பதிலும்
அதிசயமில்லை. அவன் சிருஷ்டி அகண்ட சிருஷ்டியுடன் போட்டி போடுகிறது. அதில் பிறக்கும்
குதூகலமே இலக்கிய இன்பம். இசைக்கு ஒரு வடிவத்தை அர்த்தத்தைக் கொடுப்பது பாடல். பாடலும்,
சுருதியும் கலந்த கூட்டுறவுதான் பண். பண்பாடு என்பது கூட இப்படி பண் மற்றும் பாடலில்
இருந்து உருவாகி இருக்கலாம். பாடலின் ஜீவநாடி கவிதை. அது உணர்ச்சி, அழகு, வாய்மை என
எல்லாவற்றையும் உள்ளடக்கியது. பண்பாடு உருவாகியதைப் போல கவிதையிலிருந்தே கலாச்சாரமும்
உருவாகி இருக்கலாம். கலாச்சாரம் என்பது மனிதர்களின் வாழ்வியலோடு தொடர்புடையது. அப்படிபட்ட
வாழ்வியல் கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கியிருப்பதே ‘ஊரும்காலம்’ எனும் நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி
விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஏற்கனவே பதிப்பித்த இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம்
என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம்
ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின்
‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப்
பெற்றுள்ளார்.