நூல் பெயர் : ஊழ் (கவிதைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
82
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 120
எல்லா விசைக்கும் எதிர் விசை உண்டு என்கிறது நியூட்டனின் மூன்றாம் விதி. வினை
விதைத்தவன் வினை அறுப்பான் என்கிறது பழமொழி. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்கிறது
இதிகாசம். முற்பிறவியில் செய்த, நற்செயல் அல்லது தீய செயல்களுக்கு, இப்பிறவியில் அதன்
பலன்கள் வந்து சேரும் என்கிறது கர்மா அல்லது ஊழ். இதற்கிடையில் முற்பிறப்பு, மறுபிறவி,
தலையெழுத்து, விதி ஆகிய யாவற்றையும் உண்மையல்ல என்கிறது இன்றைய அறிவியல் வளர்ச்சி.
இருப்பினும் எண்ணம் போலவே செயல் என்கிறது வாழ்க்கை. இப்படியாக எண்ணங்களையும் செயல்களையும்
கருவாக்கி வாழ்வியலை கவிதையாக்கி உருவாக்கப்பட்டிருப்பதே ‘ஊழ்’ எனும் நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி
விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நம் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியிடும் ஆறாவது நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’,
‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர்
விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.